5 மாத மர்ம நாடகங்களுக்குப் பின்னர் போலீஸார் கஸ்டடியில் சிக்கித் தவிக்கும் முகிலனின் உண்மை நிலவரம் ஒருவருக்கும் விளங்கவில்லை.  மீடியாவிடம் ஒரு வார்த்தை கூட பேசிவிட முடியாதபடி காவல்துறை தந்து முரட்டுப்பிடிக்குள் அடுத்தடுத்து நகர்த்திக்கொண்டே போகிறது.

இந்நிலையில் காட்பாடி  ரயில்வே காவல் நிலையத்திலிந்து போலிஸ் ஜீப்புக்குள் மிகவும் கெடுபிடியாக முகிலன் ஏற்ற்ப்படும் 17 செகண்ட் வீடியோ ஒன்று பகீர் கிளப்புகிறது. நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல விடாமல் அவர் ஜீப்புக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறார். அப்போது ஒரு நிருபர்,’சார் யாரோட கட்டுப்பாட்டுலயாவது இருந்தீங்களா அல்லது நீங்களாப் போனீங்களா? என்று கேட்க,....கடத்தீட்டுப்போய்யிட்டாங்க’என்றபடி மேலும் ஏதொ சொல்ல முயலும் முகிலனை வலுக்கட்டாயமாக இழுத்துப் போலீஸார் ஜீப் கதவைச் சாத்துகின்றனர்.