குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

கடந்த 20 ஆம் தேதி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை அரசிற்கு எடுத்து செல்லும் வகையில் நாடு முழுவதும் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவையில் உள்ள 46 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் படி 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் நிறைந்த சிட்கோ, கிணத்துக்கடவு, பீளமேடு, துடியலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் மூலப் பொருட்களின் விலை தினந் தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுப் படுத்தவும், விலை உயர்வை நிர்ணயிக்கவும் ஒரு கமிட்டியை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அவர்களே விலையேற்றத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் ஒருநாள் கதவடைப்பின் மூலம் ரூ.1,500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவக்கும் தொழில் அமைப்பினர், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர். இதே போன்று மதுரையிலும் மூலப்பொருட்களில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அனைத்து தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன எனவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.