தேசபக்தி என்ற சொல்லை பாஜகவும் ரஜினியிம் அரசியலாகவும், வணிகமாகவும் ,அச்சுருத்தலுக்காவும் பயன்படுத்திவரும் நிலையில், தேச பக்தியில் அரசியல் செய்யக்கூடாது என்று ரஜினி சொல்வது வேடிக்கையாக உள்ளது, என விடுதலை சிறுத்தைகள் கட்சி நடிகர் ரஜினி காந்தை மிகக்கடுமையாக சாடியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் நாட்டில் பாதுகாப்பில் தொடர்புடையது எனவும், இது போன்று  தேச பக்தியில் விவகாரத்தில் யாரும் அரசியல் சொய்யக்கூடாது எனவும்  நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார், ரஜினியின் இக்கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வந்த நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி. ரஜினியின் இக்கருத்தை மிககடுமையாக விமர்சித்துள்ளது, அது குறித்து அக்கட்சியின் துணை பொது செயலாளர்களில் ஒருவரான வன்னிஅரசு ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் காட்டமாக கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.அவரின் பதிவு பின்வருமாறு 


தேச பக்தியில் அரசியல் செய்யக் கூடாதாம்... நடிகர் ரஜினி சொல்கிறார்... தேச பக்தியே ஒரு அரசியல்தான். 
,தேச பக்தியே ஒரு வணிகம் தான்...தேசபக்தி என்று பேசுவதே ஒரு அச்சுறுத்தல் தான்... புல்வாமா தாக்குதல் நடத்தப்படதற்கு பின்னர் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவத்தை சுட்டுக்கொன்றதாக  மோடி சொன்ன போது எங்கே ஆதாரம் என்று கேட்டதற்கு  இந்திய ராணுவத்தின் மீதே சந்தேகமா, தேச பக்தியில் விளையாட வேண்டாம் என்று மோடி சொன்னதற்கும் , தற்போது ரஜினி சொல்லி இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ரஜினியை விமர்சித்து வன்னிஅரசு பதிவிட்டுள்ள இக்கருத்துக்கு பாஜக எதிர்பாளர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.