முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுவது பாராட்டுக்குரியது என திமுக கூட்டணியை சேர்ந்த எம்.பி. சின்ராஜ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து பேசிய கொங்குநாடு மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. சின்ராஜ் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போலவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை அவர் வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் வரவேற்க கூடியது என்றும் சிலர் கூறி வருகின்றனர். 

மேலும், பேசிய அவர், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினிகள், மத்ய உணவு, சீருடைகள், நோட்டு புத்தகங்கள் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி முதல்வர் பழனிச்சாமியை பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.