movie crew shocked that bahubali released in internet

தமிழகத்தில் இன்று பாகுபலி-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் இன்று பாகுபலி-2 9 ஆயிரம் திரையரங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பட விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாகுபலி தமிழில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஆனாலும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கும் பிறகு சற்று தாமதமாக பாகுபலி 2 வெளியிடப்பட்டது. இந்தப்படம் இன்று காலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. தற்போது பிரச்சனை தீர்க்கப்பட்டதால் தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் தமிழில் பாகுபலி-2 படம் வெளியிடப்பட்டுள்ளது..

இந்நிலையில் பாகுபலி 2 சற்று நேரத்துக்கு முன் முழுப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட விரோதமாக இன்று காலை 8 மணிக்கே பாகுபலி 2 இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.