நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்த முன்னாள் அமைச்சர் இ.அகமதுவின் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்கேரள நாடாளுமன்ற உறுப்பினரான இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, அருகிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள, ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு, அகமது அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால், இன்று அதிகாலை 2 மனிக்கு அகமது உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழ சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் அகமதுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.