Asianet News TamilAsianet News Tamil

தமிழக அமைச்சர்களில் பாதி பேர் உளறல் பேர்வழிங்க..! அந்தாளை பத்தி பேசுற அளவுக்கு நான் தரம் தாழ்ந்துடலை..! அரசர் யாரை இப்படி வெளுக்கிறார்?

எங்கேயெல்லாமோ சுற்றிவிட்டு கட்டக் கடைசியில் காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அவரது யோகம், மாநில தலைவர் பதவியே லக்கடித்தது. அதில் நீண்ட நாட்களாக கோலோச்சிய அவரது ஃபியூஸை பிடுங்கிவிட்டனர் இளங்கோவனும், குஷ்புவும் இணைந்து. அரசரின் இடத்தில் கே.எஸ்.அழகிரியை அமர வைக்கப்பட்டபோது ‘என்னத்த இவரெல்லாம் கட்சிய வளர்த்து?’ என்று பலரும் புலம்பினர்.

most of tamilnadu ministers are flattering fellows
Author
Tamil Nadu, First Published Oct 18, 2019, 6:31 PM IST

எங்கேயெல்லாமோ சுற்றிவிட்டு கட்டக் கடைசியில் காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அவரது யோகம், மாநில தலைவர் பதவியே லக்கடித்தது. அதில் நீண்ட நாட்களாக கோலோச்சிய அவரது ஃபியூஸை பிடுங்கிவிட்டனர் இளங்கோவனும், குஷ்புவும் இணைந்து. அரசரின் இடத்தில் கே.எஸ்.அழகிரியை அமர வைக்கப்பட்டபோது ‘என்னத்த இவரெல்லாம் கட்சிய வளர்த்து?’ என்று பலரும் புலம்பினர். 

most of tamilnadu ministers are flattering fellows

அரசரும் ரசித்தார். ஆனால் அழகிரி மிக லாவகமாகத்தான் அரசியல் பேசிக்கொண்டும், செய்து கொண்டும் இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையில் அக்கட்சி தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து செம்ம அறுவடையை பார்த்ததில் அரசருக்கு பெரும் கடுப்பு. ஆனாலும் திருச்சி லோக்சபா தொகுதியின் எம்.பி.யாகிவிட்டதில் அவருக்கு பாதி நிம்மதியே. அரசரின் பேட்டி என்றாலே எதிர்க்கட்சியில் மட்டுமல்ல, சொந்தக் கட்சியிலிருக்கும் அவரது எதிரிகளுக்கும் அடிவயிறு கலங்கும். அந்தளவுக்கு தாறுமாறு தக்காளி சோறாகப் பேசிவிடுவார் மனிதர். 

most of tamilnadu ministers are flattering fellows

இப்போது ஒரு அரசியல் புலனாய்வு இதழுக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் ச்சும்ம கொத்துக்கறி போட்டிருக்கிறார் அரசர். அதில்...
“இந்த சீமான் இருக்காரே அவரு தன்னோட உயரமே தெரியாமல் பேசிட்டிருக்கார். காலம் அவருக்கு தேவையான பாடத்தைப் புகட்டும். புலிகளில் யாராவது மிச்சம் இருந்தாலும் கூட அவர்கள் சீமானின் பேச்சை ஏற்றுக் கொள்ள மாட்டர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முக்கிய நிர்வாகி பாலசிங்கம் ஆகியவர்களின் பேச்சுகளடங்கிய பதிவுகள் இப்போதும் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அதில் ராஜீவ் படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்கிறார்கள். அவர்களே  மறுத்த விஷயத்தை இந்த சீமான் ‘நாங்கதான் கொன்றோம்’ன்னு சொல்றதெல்லாம் காமெடியா இருக்குது. 

most of tamilnadu ministers are flattering fellows

அ.தி.மு.க. அமைச்சர்கள் எல்லை இல்லாமல் தொல்லை ஏற்படுத்தும் விதமாக பேசக்கூடியவர்கள் என்று தெரிந்துதான் ஜெயலலிதா இவர்களை எல்லாம் பேசவிடாமல் வைத்திருந்தார். அமைச்சர்களில் பாதி பேர் உளறல் பேர்வழிகளாகவும், மற்றவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் நபர்களாகவும் இருக்கிறார்கள். தகுதி அடிப்படையில் அமைச்சர்களை தேர்வு செய்திருந்தால் இந்த மாதிரி நபர்கள் வர வாய்ப்பே இல்லை. சரி விடுங்க, இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அமைச்சர் பதவி போன பிறகு, யாரும் இவங்களை கண்டுக்க மாட்டாங்க. 
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். 

most of tamilnadu ministers are flattering fellows

நான் அவரைப் பற்றி பேச எதுவுமே இல்லை. கராத்தே தியாகராஜன் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு என்னுடைய தரம் தாழ்ந்துவிடவில்லை. அரசியல் ரீதியாக அவரையெல்லம பற்றி நான் பேசவே விரும்பலைங்க.” என்று கராத்தேவின் தலையை திருவியிருக்கிறார் அரசர். 
இதற்கு கராத்தேவின் பதில் எவ்வளவு குரூரமா இருக்குமுன்னு தெரியலை!

Follow Us:
Download App:
  • android
  • ios