கொசுக்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ,  அதேபோல பூண்டு , ஆல்கஹால் போன்றவற்றை சாப்பிடுவதால்  கொரோனா வைரசை தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது .  அதேபோல்   அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றும்,  காய்ச்சல் மற்றும் இருமல் சளி போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் மட்டும் அணிந்தால் பொதுமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல் சுகாதார பணியாளர்கள் மற்றும்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டும் முகமூடியை அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரவித்துள்ளது.

   

கொரோன வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது ,  இந்நிலையில்  இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரையில் இந்த வைரசுக்கு இந்தியாவில்  18 பேர் உயிரிழந்துள்ளனர் .  கரோனா வைரஸ் எப்படி வேகமாக பரவி வருகிறது அதேபோல அதுதொடர்பான வதந்திகளும் பரவி வருகிறது , கொரோனா வைரசை தடுக்க  பூண்டு மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் தடுக்க முடியும் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன .  அதாவது கொரோனா வைரசை அழிக்கும் சக்தி ஆல்கஹாலில் உள்ளதால்  மது அருந்துவதின் மூலம் கொரனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் தகவல்கள் பரவுகின்றன.  அதேபோல்  பூண்டு சாப்பிடுவதன் மூலம் கொரோனாவிலிருந்து  தப்பித்துக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. 

இது மட்டுமின்றி மற்றொரு தகவலாக பாதித்த நபரை கடித்த கொசு மற்றவர்களை கடிக்கும் போது அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றும் இதுவே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கு காரணம் என்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன .  எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் ,  அப்போது கூறி அவர்கள் கொசு மூலமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை அது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்தனர் .  அதேபோன்று பூண்டு சாப்பிடுவதனால் அல்லது ஆல்கஹால் எடுத்துக் கொள்வதினால்  கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பூண்டு சாப்பிடுவதாலும் மது அருந்துவதாலும் வைரசை  தடுக்கலாம் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.