Money power seized the verdict of the people - Rahul Gandhis attack on BJP

கோவா, மணிப்பூர் மாநில தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை, பா.ஜனதா கட்சி பண பலத்தால் அபகரித்துக்கொண்டதாக ராகுல் காந்தி தாக்குதல் தொடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாமதம் ஏன்?

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் காங்கிரஸ் தாமதம் செய்தது ஏன்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது-

அபகரிப்பு

‘‘மணிப்பூர், கோவா மாநிலங்களில் மக்கள் வழங்கிய தீர்ப்பை அபகரித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் (பா.ஜனதா) செயல்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எவ்வளவு நாட்கள் ஆட்சியில் நீடிப்பார்கள் என்பது கேள்வி அல்ல. ஆனால், இதற்காக அவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்பதுதான் முக்கியம்.

அதிகார துஷ்பிரயோகம்

கோவா மாநில கவர்னர் பாரசட்சமாக நடந்து கொண்டார். கவர்னரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது என்பது, அவர்களைப் பொருத்து மிக சாதாரணமான விஷயம்...2 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்.

ஆனால், அங்கு நிதி மற்றும் பணநாயகத்தின் மூலம் ஜனநாயகம் வேரோடு சாய்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கோவா, மணிப்பூர் மாநில மக்கள் வழங்கிய தீர்ப்பு பா.ஜனதாவால் திருடப்பட்டு உள்ளது.

கொள்கை

பா.ஜனதாவுடனான எங்கள் போராட்டம், கொள்கை அடிப்படையிலானது. கோவா, மணிப்பூரில் பா.ஜனதா செய்தது அவர்களுடைய சித்தாந்தம் ஆகும். அதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடி வருகிறோம்,

கார்கேஜி (மக்களவை காங்கிரஸ் தலைவர்) என்னிடம் கடிதம் ஒன்றை காண்பித்தார். பெரும்பான்மை பலம் குறித்து பலப்பரீட்சை எதுவும் நடத்தாமல், மனோகர் பாரிக்கரை கோவா முதல்-அமைச்சராக நியமித்து கவரனர் பிறப்பித்த உத்தரவுதான் அது.

வாழ்த்துகள்

இதனால்தான் அங்கு எங்களால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாமல் போய்விட்டது. கோவா கவர்னரை பொருத்தவரை ஏற்கனவே அவர் பாரபட்சமாகத்தான் செயல்பட்டு வருகிறார்.

உ.பி.யில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு மக்களை பிளபுபடுத்தியதே காரணமாகும். இருப்பினும் உ.பி. தேர்தல் வெற்றிக்காக பா.ஜனதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்

அனைத்துக்கட்சிகளுக்குமே ஏற்ற இரக்கங்கள் உண்டு. உ.பி.யில் எங்களுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பா.ஜனதாவுடன் எங்கள் கொள்கை போராட்டம் தொடரும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.