தர்ம யுத்தம் நடத்திடுறோம்: ஸ்டெர்லைட் திறந்துடுறோம்: ஹைட்ரோகார்பன் எடுத்துடுறோம்: 5 8 ம் வகுப்புக்கு பப்ளிக் எக்ஸாம் எழுத வெச்சுடுறோம்: சிஏஏ ஆதரிச்சுடுறோம்:  இப்ப எல்லோரும் சேர்ந்து சொல்லுங்க “ அம்மா இப்ப சும்மா, மோடி தான் எங்க டாடி” னு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.


தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மேற்குரிய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து திமுக ,மக்கள் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மக்கள் மன்றத்தில் அம்பலபடுத்தி  வருகிறார்கள். இது போன்ற சட்டங்களை ஆளும் கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற சட்டங்களை ஆதரித்திருப்பாரா? அம்மாவின் பெயரால் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு இதற்கெல்லாம் ஜால்ரா போடும் விதமாக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், மோடியை எங்கள் டாடி என்று சொல்லி அதிமுக அரசு இயங்கி வருவதாகவும் அந்த அர்த்ததில் சுசகமாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.