திரெளபதி என படத்திற்கு பெயர் வைத்ததால் அந்த டைட்டிலை வைத்து விசிகவினர் அசிங்கப்படுத்தி வருகின்றனர். திரெளபதிக்கு 5 கணவன்கள்.. நல்லா பொறுத்தமாகத்தான் டைட்டில் வைத்திருக்கிறார்கள் என பதிவிட்டு வருகின்றனர்

.

இதுதான் அவர்களை பொதுமக்களிடம் வெறுக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு குடியானவன் கூட அல்லாவை பற்றி அவதூறு பேசமாட்டான். ஆனால் உங்களை போன்றவர்கள் இந்துக்களின் கடவுள்களை இழிவு செய்கின்றன. திரெளபதி பத்தினியின் மகன்களுக்கு பத்தினி தெய்வம். 
 
ஒரே ஆண்டில் 3000 மேற்பட்ட திருமணங்கள். அதுவும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே ஒரு வக்கீல் ஒரே ஆண்டில் 1200 திருமணங்களுக்கு எப்படி உறுதி மொழி வழங்கினார்? நீதிமன்றத்தில் எனது மனைவியை என்னிடம் மீட்டுக்கொடுங்கள் என்று பதிவான தொடர் ஆட்கொணர்வு மனு வழக்குகளை வைத்து விசாரணை செய்ததில், அப்படி ஒரு திருமணங்களே நடைபெறவில்லை என தெரியவந்தது.

பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்க ஒரு கும்பல் செயல்பட்டது. இவை எல்லாம் கற்பனையில் உதித்தவை இல்லை சிபிசிஐடி அதிகாரியான திருமதி. ஜெயகெளரி விசாரணையில் வந்த தகவல்கள் இவை. இப்படித்தான் திரெளபதி திரைக்கதை உருவாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவு குரலாகவும், பாதிப்பை உண்டாக்கியவர்கள் எதிர்ப்பு குரலாகவும், என்னவென்று அறிந்துகொள்ளும் பக்குவப்படாத சிலர், சாதி ஒழிப்பு பற்றிய கருத்துள்ளவர்கள், ஒரு புறமாகவும், என பல்வேறு கருத்தியல் பாய்ச்சலை இப்படம் உருவாக்கியுள்ளது.

சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என ஒரு தரப்பு ஆடிக்கொண்டிருந்தது. மெட்ராஸ் பட புட்பால் மேட்ச். ஹீரோ டீமுக்கு நீல நிற பனியன். எதிர் டீமுக்கு மஞ்சள் நிற பனியனை போட்டு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தன் சாதிய நிற அரசியல் படமெடுத்தார் பா.ரஞ்சித். இப்போது திரெளபதி படமும் தனது தரப்பு நியாயத்தை சொல்வதற்காக வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து பா.ரஞ்சித்’’ திரெளபதி படத்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ‘’ எனக் கூறி நழுவி விட்டார்.  அவரது இந்தக் கருத்தால் கடுப்பான எதிர்தரப்பு  கதறி கதறி படம் எடுப்பவர்கள் தான் பா.ரஞ்சித் - வெற்றிமாறன். இவர்களை கதறவிடவே படம் எடுப்பவர்கள் வந்த இயக்குனர்கள் மோகன் - முத்தையா எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.