இந்தியாவும் இந்து மதமும் ஒன்றுதான். இந்தியா இயற்கையாகவே இந்து தேசம். குணநலன்களை உருவாக்குவதும், ஒற்றுமையாக்குவதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் இலக்கு.
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத், இந்தியாவைப் பற்றி பெருமைப்படும் அனைவருமே ஒரு இந்துதான் என்று தெரிவித்துள்ளார்.
குவஹாத்தியில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பகவத், ‘‘இந்து மதம் ஒரு மத அடையாளமாக மட்டுமல்ல, அது ஒரு நாகரிக அடையாளம். இந்தியாவும் இந்து மதமும் ஒன்றுதான். இந்தியா இயற்கையாகவே இந்து தேசம். குணநலன்களை உருவாக்குவதும், ஒற்றுமையாக்குவதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் இலக்கு.
இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் நாகரிகம் ஏற்கனவே இதை பிரதிபலிக்கிறது. இந்து மதம் என்பது வெறும் ஒரு மதச் சொல் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு நாகரிக அடையாளம்.

இந்தியாவும், இந்துவும் ஒரே சொற்கள். இந்தியா இந்து தேசமாக இருப்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை. அதன் நாகரிக இயல்பு ஏற்கனவே இதை பிரதிபலிக்கிறது. யாரையும் எதிர்க்கவோ அல்லது தீங்கு செய்யவோ அல்ல. மாறாக குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்கு பங்களிக்க ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது. பன்முகத்தன்மைக்கு மத்தியில் இந்தியாவை ஒன்றிணைக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

அசாமில் மக்கள்தொகை மாற்றங்கள் தொடர்பான கவலைகளை சரி செய்ய செய்ய தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, ஒருவரின் நிலம், அடையாளத்தின் மீது வலுவான பற்று வைக்க வேண்டும். சட்டவிரோத ஊடுருவல், இந்துக்களுக்கான மூன்று குழந்தைகள் விதிமுறை உட்பட ஒரு சமநிலையான மக்கள்தொகை கொள்கையின் தேவை, பிளவுபடுத்தும் மத மாற்றங்களை எதிர்ப்பதன் முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
நமது நிலம், கலாச்சாரத்தின் மீது நாம் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, வலுவான பற்று ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தன்னலமின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

