2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்... அண்ணாமலை அறிவுறுத்தல்!!
திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேசிய அவர், திரிபுரா, மேகாலாயா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் பாஜக தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான்.
இதையும் படிங்க: எனக்கு காங். சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் விருப்பமில்லை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி!!
மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான். மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. திமுக அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ்-ஐ கண்டித்து ஓபிஎஸ் அணி இன்று ஆர்ப்பாட்டம்... நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது மதுரைக்கிளை!!
விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும். அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கட்சி மற்றும் கூட்டணி எம்பிக்கள், மக்களவையில் பணியாற்ற வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து உங்களுக்கான அரசாக பாஜக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.