Asianet News TamilAsianet News Tamil

காலை 9 மணி..! முக்கிய அறிவிப்புகள் வெளியிடுகிறார் பிரதமர் மோடி..!

இன்று காலை 9 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் மக்களிடம் உரையாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து தனது உரையில் பிரதமர் குறிப்பிடக்கூடும்.

modi will address nation on morning 9
Author
New Delhi, First Published Apr 3, 2020, 7:18 AM IST

தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 2,543 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 72 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது.

modi will address nation on morning 9

கடந்த மாதம் 23 ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் மக்களிடம் உரையாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார்.

modi will address nation on morning 9

கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து தனது உரையில் பிரதமர் குறிப்பிடக்கூடும். மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை பின்பற்றாமல் மக்கள் வெளியில் நடமாடுவதை காண முடிகிறது. அதன்காரணமாக நிகழப்போகும் பாதிப்புகள் குறித்தும் மோடி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios