இப்போது ஜமாத் சென்று திரும்பியவர்களால் தான் கொரோனா அதிகம் பாதித்து வருகிறது. அவர்கள் சிகிச்சைக்கும், சோதனைக்கும் ஒத்துழைக்க மறுத்து வருகிறார்கள். ஆகையால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார் மோடி.ஆகையால், மற்ற விஷயங்களைப்போல இதிலும் மூக்கை நுழைத்து ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது என்பதை தடுக்கவே மோடி அவரை தொலைபேசியில் அழைத்து இந்த் விஷயம் குறித்து பேசியதாகக் கூறுகிறார்கள். 

ஸ்டாலினிடம் பேசிய மோடி,’’இந்த விவகாரத்திலும் நீங்கள் அவர்களுக்கு சப்போர்ட் செய்யக்கூடாது. இது நாட்டு மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். நாடே முடங்கிக் கிடக்கிறது.உயிர் பயத்தில் மக்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் மாநாட்டுக்கு சென்று திரும்பிய பிறகும் சோதனைக்கு வராமல், சிகிச்சைக்கு வந்தாலும் ஒத்துழைக்காமல், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.  இது இந்திய நாட்டும் மக்களுக்கும் அவர்கள் செய்யும் துரோகம். ஆகையால் நீங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்ததெல்லாம் போதும். இனியும் கொரோனா விவகாரத்தில் அவர்களுக்கு குரல் கொடுத்தால் அது உங்கள் அரசியலுக்கு நல்லதல்ல’’ எனஎடுத்துக் கூறி எச்சரித்துள்ளார் மோடி. 

அதனைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருந்துள்ளார் மு.க.ஸ்டாலின். பிறகு தான் சூழலை எளிதாக்க, ஸ்டாலினின் குடும்பம் பற்றி நலம் விசாரித்து பேச்சை முடித்திருக்கிறார் மோடி.  

பாஜக கால்தடம் இல்லாத தமிழகத்தில் நேற்று மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றியதை வைத்தே புரிந்து கொள்ளலாம். மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதனை கொரோனோவை வென்றால் நிச்சயம் இந்தியா தற்போதைய சூழலில் வெற்றிக்கனியை பெரும் என நம்பப் படுகிறது, அது உலக அரசியலில் தனக்கான நிலையான இருப்பிடத்தை பிடிக்க உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் வீழ்ச்சியே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவியது. 

அது போல் ஒற்றுமையாக கொரோனவை வென்றால் இந்தியா சாதிக்கும் என்றும் அதற்காக மோடி அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.