Asianet News TamilAsianet News Tamil

#Unmaskingchina பேஸ்மட்டத்தை மறைத்து பில்டிங்கை ஸ்ட்ராங்கா காட்டவே மோடி லடாக் பயணம்... சினக்கும் சீனா..!

பிரதமர் மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலையை மறைக்கவே அவர் லடாக் பயணத்தை மேற்கொண்டதாக சீன ஊடகம் விமர்சித்துள்ளது. 

Modi travels to Ladakh to hide face level
Author
Ladakh, First Published Jul 4, 2020, 12:48 PM IST

பிரதமர் மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலையை மறைக்கவே அவர் லடாக் பயணத்தை மேற்கொண்டதாக சீன ஊடகம் விமர்சித்துள்ளது.

 Modi travels to Ladakh to hide face level

கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய- சீன வீரர்கள் லடாக் பகுதியில் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், தங்கள் தரப்பு இழப்பை சீனா வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே, எல்லை பகுதியை காக்க போராடும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த பிரதமர் மோடி லே பகுதியில் உள்ள நிம்முவுக்கு சென்றார். அங்கு  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களிடையே  உரையாற்றி உற்சாகப்படுத்தினார்.  Modi travels to Ladakh to hide face level

மோடியின் லடாக் பயணத்திற்கு சீன அரசு கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறது. பிரதமர் மோடியின் லடாக் பயணம் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜிங்கில் உள்ள ஜிங்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் கியான் ஃபெங்  கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், '' மோடி தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்காகவும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தான் ஒரு "வலிமையானவர்" என்பதைக் காட்டுவதற்காகவும் லே பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை போன்றவற்றை மறைக்கும் வகையில் மோடி  இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.Modi travels to Ladakh to hide face level

எல்லை விவகாரத்தை  சுமுகமாக பேசி தீர்க்க இந்திய அரசு தயராக இருந்தாலும், இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதியுடன் நிற்கிறது என்பதை சீனாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காட்ட மோடியின் பயணம் உதவியது'' என்று சொல்லப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios