தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸில் கடந்த 4 நாட்களாக பேசி வருகிறார் பிரதமர் மோடி.  

நேற்று சென்னை தி.நகரில் தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடியிடம்  ஆங்கிலத்தில்  கேள்விகளை கேட்டனர், மோடியும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.

நிகழ்ச்சி தொடங்கியதுமே, கூட்டத்தைப் பார்த்து வணக்கம் சொன்ன மோடி, ‘ முதலில் யாருகிட்ட ஆரம்பிக்கிறது? உங்க கேள்வியை ஸ்டார்ட் பண்ணுங்க...’ என சொல்ல அதற்கு பெண் நிர்வாகி ஒருவர் கேள்வியை தொடங்கினார். ‘தமிழ்நாட்டில் நம்ம கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில நிர்வாகிகள் பேசிட்டு இருக்காங்க. அதுக்கு சாத்தியம் இருக்கா ஜி? எனக் கேட்டார்.

அதற்க்கு பதிலளித்த மோடி, ‘அவங்க சொல்ற தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நானும் சொல்றேன். 30 தொகுதி இல்ல... அதுக்கு மேலயும் ஜெயிக்கலாம். ஆனால் அதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும். 30 தொகுதி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை மாநில நிர்வாகிகளுக்கு வரும் போது உங்களுக்கு ஏன் வரவில்லை? உங்களுக்கும் நம்பிக்கை வந்தால் நிச்சயமாக நாம தமிழகத்தில் நாம் 30 தொகுதிகள் ஜெயிக்கலாம். பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு நம் கட்சி தமிழகத்தில் வளர்ந்து இருக்கிறது. 

இதுவரை, காங்கிரஸ் கட்சி கூட  தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளுக்கு பூத் கமிட்டி அமைத்திருக்க மாட்டார்கள். ஆனால், நாம் அமைத்திருக்கிறோம். இதுவே நமது முதல் வெற்றிதான். அதனால் நம்பிக்கையோடு உழையுங்கள் என்று சபையில் இருந்த ஒட்டுமொத்த பிஜேபியினரை தெறிக்கவிட்டுள்ளார்.