Asianet News TamilAsianet News Tamil

தினகரன் பக்கம் திரும்பும் மோடி: மாறும் காட்சிகள், அலறும் அ.தி.மு.க!

Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK
Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK
Author
First Published Mar 14, 2018, 1:29 PM IST


’குக்கர் சின்னம் கிடைத்தது! மார்ச் 15-ல் புதிய கட்சி துவங்குகிறார் தினகரன்’ என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரண செய்தி. ஆனால் அ.தி.மு.க.வுக்கு இது  ஒரு வகையான ஹார்ட் அட்டாக்! கிட்டத்தட்ட அதிர்ந்து கிடக்கிறது பழனிசாமி மற்றும் பன்னீர் வகையறா!
காரணம்?

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் ஒன்றை தவிர வேறேதும் தினகரனின் கையில் இல்லை. என்னதான் பணம் வைத்திருந்தாலும்கூட அதிகார மையத்துக்கு ஆகாத நபராக இருந்தால் அதனால் எந்த பலனுமில்லை. தமிழக அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து அந்த இடைத்தேர்தலில் அமோகமாக வெற்றி கண்டவர் தினகரன். நிராயுதபாணியாக நின்று வென்றவர் கையில் மளமளவென ஆயுதங்கள் வந்து குவிந்தால் நிலைமை என்னவாகும்? அடித்து துவைத்து துவம்சம் செய்துவிடமாட்டாரா? அதே கவலைதான் பன்னீருக்கும், பழனிசாமிக்கும்.

Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK

நேர்வழியோ அல்லது பைபாஸோ! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தனது சொந்த முயற்சியால் ஜெயித்தார். இந்நிலையில் அவருக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்கிட சொல்லி டெல்லி கோர்ட் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புள்ளியிலிருந்துதான் தமிழக அரசுக்கு மோடி கோஷ்டி மேல் டவுட் கிளம்ப துவங்கியுள்ளது.

காரணம் இடைத்தேர்தலில் அசகாயசூர இரட்டை இலையையே கன்னாபின்னாவெனும் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த வகையில் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் பலமான தேர்தல் சின்னம் ‘குக்கர்’தான். அதை தினகரனுக்கு வழங்கிட சொல்லி உத்தரவு வருகிறதென்றால் இதன் பின்னணியில் டெல்லி அரசியல் லாபி இருக்கிறது என்று நம்புகிறது அ.தி.மு.க.

Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK

தனக்கு செண்டிமெண்டாக ராசியான சின்னம் கிடைத்த மறுநாளே தனிக்கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிடுகிறார் தினகரன்! கொடி, பெயர்...என்று ஆலோசனைகள் பறக்கின்றன. இதையெல்லாம் பார்த்து மண்டை காய்ந்து போன அ.தி.மு.க. தரப்பு மெதுவாக தனது உளவு வேலையை டெல்லி பவர் லாபி பக்கம் செலுத்தியதில் கிடைத்த தகவல்கள் அவர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கின்றன! என்கிறார்கள்.அப்படி என்ன தகவல்?...

அதாவது தமிழக அரசின் செயல்பாடு மற்றும் பன்னீர், பழனிசெல்வம் ஆகியோர்  குறித்த மக்கள் செல்வாக்கு பற்றி மத்திய உளவுத்துறை ஒரு ரகசிய கணிப்பை நிகழ்த்தியிருக்கிறது. ஜெ., பிறந்தநாள் விழாவுக்காக மோடி சென்னைக்கு வந்து சென்ற பின் தான் இது நடந்திருக்கிறது. இந்த கணிப்பின் முடிவு பழனி - பன்னீர் அணி பற்றிய எதிர்மறை விஷயங்களைத்தான் தந்திருக்கின்றன.

Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK

ஆட்சி மீதும் ஆளும் இருவர் மீதும் மக்கள் செம்ம கடுப்பிலிருப்பது ரகசிய அலசலில் தெரிந்திருக்கிறது.

கூடவே ரஜினி, கமல் அரசியல் பரபரப்பை தாண்டி தினகரனுக்கென மிகப்பெரிய மாஸ் வைபரேஷன் இருப்பதையும் அந்த அலசல் உணர்த்தியிருக்கிறது. இதெல்லாம் அப்படியே டெல்லி பவர் செண்டரின் கவனத்துக்கு பரிமாறப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்தே குக்கர் சின்னமானது தினகரனின் கட்சி கிச்சனுக்கு சென்றதை பி.ஜே.பி. பெரிதாக கண்டுகொள்ளவில்லை, சொல்லப்போனால் பி.ஜே.பி.யின் இன்முகம் இனி தினகரனை நோக்கி புன்னகைக்கும்! என்கிறார்கள்.

Modi to return to Dinakaran Changing scenes shouting at AIADMK

ஆனால் இதெல்லாம் வெளிப்படையாய் தெரியாமலிருக்க, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார்! எனும் வழக்கில் மட்டும் சற்றே இறுக்கம் காட்டிக் கொள்வார்களாம். மற்றபடி புது நட்பு மலர்வது உறுதியே! என தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இவையெல்லாம்தான் பழனி மற்றும் பன்னீரை நோக வைத்திருக்கின்றன.

மோடியின் ஆசி தங்களை விட்டு நகர்கிறதென்றால் ஆட்சி தங்களின் கையை விட்டு போகிறது என்றுதானே அர்த்தம்! பின்னே மைனாரிட்டி அரசு தப்பிப் பிழைத்து நிற்பது அவரது ஆசியில்தானே!

ஆக தினாவுக்கு இனி தடதட ஏறுமுகம்தான் போங்கோ! என கூத்தாடுகிறது அவரது பட்டாளம்.

Follow Us:
Download App:
  • android
  • ios