மகாராஷ்டிர மாநிலம் லாடுரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் உருவானதற்கு காரணமே காங்கிரஸ்தான் என ஒரே போடாய் போட்டுள்ளார்.

பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, கடும் வெயில் கூட பொருட்படுத்தாமல் கூட்டத்தில் அமர்ந்து இருப்பவர்களின் தவம் வீணாகிப் போகாது.. இதற்கு பிரதிபலனாக வட்டியுடன் சேர்த்து தான் திரும்ப வழங்க இருக்கிறேன். இந்தியா மேன்மேலும் வலிமையாக பாஜகவிற்கு வாக்களியுங்கள். குறிப்பாக முதன்முறையாக வாக்களிப்பவர்கள் ஏழை மக்களுக்கு வீடு கிடைக்க பெறுவதையும் விவசாய மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்யும் வண்ணமாக பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்றார்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருந்திருந்தால் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே உருவாகி இருக்காது. பாகிஸ்தானில் பேசும் மொழியைப் போல தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி பிரதமர் வேண்டும் என்பவர்களுக்கு பேராதரவை தருகிறது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்.

ஆனால் இந்திய நாட்டை மேன்மேலும்  வலிமையாக்குவதிலும் தேசத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பாஜக தேர்தல் அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை வகுத்து உள்ளதாகவும் மோடி பேசி உள்ளார்.