இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி எடுத்த பல அதிரடி முடிவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணமதிப்பிழப்பு:

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்திலிருந்த ரூபாய் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு,  டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க வழிவகை செய்த்தனர். 

திட்டக் கமிஷன் கலைப்பு:

2015 ஜனவரி ஒன்றில் நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

ஜி.எஸ்.டி 

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டுவர ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதாவது சரக்கு மற்றும் சேவை வரி முறையை 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த முறையில் 5% 12% 18% 28% என்ற விகிதங்களின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்:

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாவட்டம் புல்வாமா பகுதியில்  பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பின்னர் பிப்ரவரி 26 ஆம் தேதி பாலக்காட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாத அமைப்பை அகற்றியது. 

இட ஒதுக்கீடு

எஸ்சி, எஸ்டி ,ஓபிசி பிரிவுகளை தவிர்த்து மற்ற பிரிவில் வருபவர்களுக்கு, அதே சமயத்தில் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள உயர் ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினாலும் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கூடுதலாக உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் எதிர்கட்சியினரும் இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக் தடை மசோதா ..!

2019 ஆம் ஆண்டு ஜுலை 30 இல் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம் இஸ்லாம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து..!
 
2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதியான நேற்று, கடந்த 22 ஆண்டுகளாக அமலில் இருந்த காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.