எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினியால் திமுகவை வீழ்த்த முடியாது என பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்  தெரிவித்துள்ளார். எனவே திமுக அதிமுக விற்கு மாற்றம் தேவை என விரும்புகிறவர்கள் நடிகர் ரஜினிகாந்தை ஆதரிக்க  வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனியார் ஊடம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ள மாரிதாஸ், கருணாநிதி ஜெயலலிதா இல்லாத இந்த நிலையில் அவர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான ஆற்றல் நடிகர்  ரஜினிகாந்திற்கு மட்டுமே உள்ளது. அதேபோல திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எப்படி தமிழகம் தழுவிய அளவில் உள்ள கட்டமைப்பு உள்ளதோ அதேபோல ரஜினியால் மட்டுமே ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும். அதை அவர் ஏற்கனவே உருவாக்கிநும் வைத்துள்ளார். என்றார்.  எப்படி திராவிட கட்சிகள் கடவுள் மறுப்புக் கொள்கை மத எதிர்ப்பு என பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்ததோ அதேபோல்,  அதற்கு எதிர்மாறாக ஆன்மீக அரசியலை ரஜினி முன்வைத்துள்ளார்.  இப்படி அவர் அறிவித்ததற்கே மக்கள் அவரை பாராட்ட வேண்டும். காரணம் திமுக போன்றவர்கள் கடவுள் மறுப்பு தத்துவத்தை இந்து எதிர்ப்புக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, எதிராக எந்த கருத்தையும் பேசுவதில்லை. எனவே அது போலி கடவுள் மறுப்பு கொள்கையாக உள்ளது என்றார்.

 

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் எல்லா மதத்திற்கும்  பொதுவாக ஆன்மீக அரசியலை அறிவித்திருக்கிறார், எனவே அவரின் அரசியல் நிலைபாடு நேர்மையானதாக  உள்ளது அத்துடன், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மத்தியில்,  குறிப்பாக சாதாரண பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பிரபலமான செல்வாக்கு மிகுந்த நபரான உள்ளார். அவருக்கு உள்ள செல்வாக்கு தற்போது எந்த தலைவருக்கும் இல்லை. எனவே அதிமுக திமுகவுக்கு மாற்றாக ஒருவர் வேண்டுமென்றால் நீங்கள் ரஜினிக்கு வாக்களிக்கலாம் என மாரிதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன்  ரஜினியின் படங்கள் இனி ஓடாது அவருக்கு வயதாகிவிட்டது எனவேதான் சம்பாதிக்க அரசியலை தேடுகிறார், என்ன திமுக போன்றவற்றை மிக கீழ்த்தரமாக  ரஜினியை விமர்சித்துவருகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை, மற்ற நடிகர்கள் ஒரு விளம்பரத்தைக் கூட விடாமல் நடித்து பணம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் ரஜினி அப்படி இல்லை, அவருக்கு உள்ள புகழுக்கு அவர்  நினைத்தால் விளம்பரங்களின்  மூலமே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கோடி ரூபாய் என பணத்தை அள்ளிக் குவிக்கலாம். ஆனால் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வருகிறார்.

எனவே சாமானியர்கள் ரஜினியை ஆதரிக்கவேண்டும் எனவும்,  ரஜினிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை   விவரித்துள்ள மாரிதாஸ், இறுதியில் கூறும்போது, இந்த முறை ரஜினி அரசியலில் இறங்கி வெற்றிபெறா விட்டால், அடுத்து 25 ஆண்டுகளுக்கு திமுக அதிமுகவை ரஜினியால் மட்டும் அல்ல , வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என  தெரிவித்துள்ளார். இது ஒரு மாற்றத்திற்கான நேரம்,  இதை ரஜினி சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தவறவிட்டால்  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிறகு திமுகவை ரஜினியால் அசைத்துக்கூட பார்க்க முடியாது என ரஜினை மாரிதாஸ் எச்சரித்துள்ளார்.