நாட்டின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது என தெரிவித்தார்.

காஷ்மீரில்  370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது  2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன்.

இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் கிடைத்துள்ளது. . மக்கள் எனக்கு அளித்த வேலையை சிறப்பாக செய்து வருவதாக மோடி தெரிவித்தார்.

பிரச்சினைகளை உருவாக்குவதிலோ அதை இழுத்துக்கொண்டே செல்வதிலோ எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. புதிய அரசு ஆட்சி அமைத்து 70 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

70 ஆண்டுகளில் செய்ய முடியாததை அடுத்த  4 ஆண்டுகளில் செய்வோம்.   விவசாயம், தண்ணீர் பிரச்சினைகளை  தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.