Asianet News TamilAsianet News Tamil

இன்னும் மூணே மாசம்தான் ! அப்புறம் பாருங்க காஷ்மீர ! சும்மா தெறிக்கவிட்ட பிரதமர் மோடி !!

3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும் என்றும்,  யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான் என்றும்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 

Modi speech about kashmir
Author
Kashmir, First Published Aug 8, 2019, 9:22 PM IST

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என  மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பு  வெளியானநிலையில்,  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு உரையாற்றினார்.  அப்போது  இன்னும் மூன்றே மாதங்களில்  ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் சீரமைக்கப்பபடம் என்றும், தற்போது அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது ஒர தற்காலிக ஏற்பாடுதான் என்றும் மோடி தெரிவித்தார்.

Modi speech about kashmir

தொடர்ந்து பேசிய அவர், அம்மாநிலத்துக்கான மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். அம்மாநில மக்கள் தங்கள்  தலைவரை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்படுவதாக கூறினார்.

காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் என்றும்  காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும் என்றும் மோடி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிகமானதே என்றும் மீண்டும் அம்மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனவும் பிரதமர் உறுதி அளித்தார்.. 

Modi speech about kashmir

ஐஐடி,  எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் தொடங்கப்படும்…காஷ்மீர் மக்களின் உரிமை நிலை நாட்டப்படும். ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.. 

Modi speech about kashmir

ஜம்முவில் விமான நிலைய உருவாக்கம்,  தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும் என்றும், . பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்புக்காக பெருமளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.. 

குழந்தைகள், பெண்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கும் என்றும்  370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பட்டியல், பழங்குடியின மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்..v

Follow Us:
Download App:
  • android
  • ios