Asianet News TamilAsianet News Tamil

மோடி பேச்சைக் கேட்டால் பாதிக்கப்படுவது தமிழகம் தான்!! மதுரையில் முழங்கிய திருமாவளவன்.!!

இந்த நாட்டை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்தான் பாஜக அல்ல, இந்தியா முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பதற்றத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும் தான். என்பிஆர்-க்கு எதிராக ஏன் எடப்பாடி அறிவிப்பு வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் வாரிசுகள் என கூறிகொள்ளும் ஓபிஎஸ் ஈபிஎஸ்-க்கும், அவரது துணிச்சல் ஏன் இல்லை?. அதில் 10 சதவிதம் துணிச்சல் இருக்கிறதா? எனவும் மோடியின் பேச்சை கேட்டால் தமிழகத்தில் பாதிக்கப்படப்போவது அதிமுகதான்

Modi's speech is affecting Tamil Nadu !! Thirumavalavan.
Author
Tamil Nadu, First Published Feb 14, 2020, 6:51 AM IST

by;T.balamurukan
 
 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினைரையும் பாதிக்கும். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் போதிய ஆவணமில்லாவிட்டால் இந்துக்களும் தடுப்புமுகாம்களில் அடைக்கும் நிலையை உருவாக்கும். இந்தியாவை இந்திய ராஷ்ட்ரமாக அறிவிக்கவேண்டும் என்பது பாஜக கனவு. அதற்கு தடையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறது.
  
அப்படி ஒரு நிலை உருவாக நாங்கள் அனுமதிக்கமாட்டோம். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குத் தானே பாதிப்பு என கிறிஸ்தவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது. ஆளும் மோடி அரசு பிரிவினையை ஏற்படுத்தி கிறிஸ்துவர்களை மெல்ல பழிவாங்கும்.பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் எனது வேதம் என வேஷம் போடுகிறார். 2021-ல் இந்தியாவில் யாரும் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களும் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சி தான் குடியுரிமை திருத்த சட்டம். முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் நாட்டைப் பிரிக்க பாஜக சூழ்ச்சி செய்துவருகிறது.

இந்த நாட்டை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்தான் பாஜக அல்ல, இந்தியா முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பதற்றத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும் தான். என்பிஆர்-க்கு எதிராக ஏன் எடப்பாடி அறிவிப்பு வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் வாரிசுகள் என கூறிகொள்ளும் ஓபிஎஸ் ஈபிஎஸ்-க்கும், அவரது துணிச்சல் ஏன் இல்லை?. அதில் 10 சதவிதம் துணிச்சல் இருக்கிறதா? எனவும் மோடியின் பேச்சை கேட்டால் தமிழகத்தில் பாதிக்கப்படப்போவது அதிமுகதான் என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios