*    வெங்காயம், பூண்டு சாப்பிடாத நிர்மலா சீதாராமனுக்கு, விலை உயர்வால் பிரச்னை இருக்காது. ஆனால் நாட்டு மக்களிடம் அடிக்கப்படும் கொள்ளைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, நிதியமைச்சராக அவருக்கு உள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் லாபம் அடைவதில்லை. ஆனால், இடைத்தரகர்கள்தான் பணக்காரர்கள் ஆகின்றனர். உங்கள் கொள்கை திவாலாகிவிட்டன என்பதற்கு இதுவே சான்று.
-    பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்)

*    மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக இங்கு குடியேறிய சிறுபான்மையின மக்கள், நீண்ட நாட்களாகவே ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டால், அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். 
-    நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)


*    ரஜினி, தன் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அடுத்தாண்டு, ஏப்ரல் மாதம் நிச்சயமாக வெளியிடுவார். அதில் கொள்கை, கோட்பாடு, மாநாடு குறித்து தெளிவுபடுத்துவார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுதான் அவரது செயல்பாடுகள் உள்ளன. தேர்தலுக்கு ஆறு, ஏழு மாதங்கள் முன்னதாக ஆயத்த பணியை துவக்கினால் போதுமானது. கட்சி துவங்கிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. 
-    சத்தியநாராயணா (ரஜினியின் அண்ணன்)

*    ரஜினி சாரின் ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியிடு  தேதியானது இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. 
-    சந்தோஷ் சிவன் (ஒளிப்பதிவாளர்)

*    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாநில தேர்தல் ஆணையத்திடம் பொது சின்னம் கேட்டோம். கோரிக்கையை ஆணையம் நிராகரித்துள்ளது. அதை எழுத்துப்பூர்வமாக கேட்டோம், ஆனால் இன்னும் தரவில்லை. ஆணையை தந்தால் நீதிமன்றம் செல்வோம். எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் கட்சியினர் கடும் தொந்தரவு கொடுத்தனர். உத்வேகத்துடன் தேர்தலை சந்திப்போம். மக்கள் விரோத கும்பலுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்!
-    டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க. நிறுவனர்)

*    இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை. காந்தியின், 150வது பிறந்த நாளை, அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால், அவர் கண்ட இந்தியா, உருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன? முயன்று தோற்றவர்கள் மீண்டும் முயல்கின்றனர். உங்களின் பழைய திட்டங்கள் பலிக்க, இது பாமர இந்தியா அல்ல. இளம் இந்தியா!
-    கமல்ஹாசன் (ம.நீ.ம. தலைவர்)

*    என்னைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் இடையே அரசியல் கட்சியை துவக்குவது உறுதி. செப்டம்பரில் தி.மு.க. - அ.தி.மு.க. போல் மிகப்பெரிய மாநாடு நடத்த உள்ளார். 2021 தேர்தலுக்காக இப்போதே பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து வருகிறார். 
-    தமிழருவி மணியன்

*    வெங்காயம், தக்காளி வினியோகம் தடைபடாமலும், அதிக விலை ஏற்றம் பெறாமலும் இருக்க ஒவ்வொரு கிராமத்திலும் பால் பண்ணை போல், காய்கறி தோட்டங்களை அமைக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் ஊக்கம் அளிக்க வேண்டும். 
-    எம்.எஸ்.சுவாமிநாதன் (வேளாண் விஞ்ஞானி)

*    பற்களை துலக்குவதற்கான டூத் பிரஷ்ஷை வெளிநாட்டினர் கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆலம், வேலம் குச்சிகளை வைத்து பல் துலக்கி வந்தவர்கள் நம் முன்னோர் தமிழர்கள். 
-     ஓ.பன்னீர் செல்வம் (துணை முதல்வர்)

*    குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்துக்கும், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. குஜராத் மாநில அரசைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் வன்முறையை தூண்டியதாகவோ, ஆதரித்ததாகவோ, வன்முறையில் ஈடுபட்டதாகவோ குற்றஞ்சாட்ட எந்த ஆதாரமும் இல்லை. 
-    நானாவதி கமிஷன்.

:    விஷ்ணுப்ரியா