ரூ.20,000 கோடி மதிப்புள்ள ஆஸ்துமா மருந்து சந்தையினை அமெரிக்கா, இந்தியாவிற்கு தற்போது திறந்து விட்டுள்ளது. நாளை வேறு பல மருந்துக்கான சந்தைகளும், பல நாட்டு மருந்து சந்தைகளும் இந்தியாவுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபத்துக் காலத்தில் உற்ற நண்பன் இந்தியாதான் என்று பல நாடுகள் உணர ஆரம்பித்துவிட்டன.

இன்று ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் கோடியாக உள்ள மருந்து ஏற்றுமதிகள் இன்னும் சில வருடங்களில் மும்மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் இங்கு வேலை வாய்ப்புகளும் அன்னிய செலாவணியும் மிகப் பெரிய அளவு பெருகும் நல்வாய்ப்பு உண்டு. ஒரு ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து பலவற்றை சரி செய்யும் சஞ்சீவினி மூலிகைதான் போல.

மருந்து சார்ந்த தொழிலில் இப்படிப்பட்ட பொன் வாய்ப்பு இனி வராது. உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சீனாவிடம் இருந்து இன்னும் பல உற்பத்தி துறைகளை இந்தியா பக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருப்பக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த கொரோனா பிரச்சினை முடிந்து நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.