பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி,எஸ் மகனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்தியாவின் 17வது பிரதமாரக குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இலாகாக்களை அறிவிக்காத 24 பேர் கேபினட் அமைச்சர்களாவும் பதவியேற்றுக் கொண்டனர். இணையமைச்சர்களும் பத்வி ஏற்றுக் கொண்டனர்.

 

மத்திய அமைச்சர்களாக மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராஜ்நாத் சிங். அமித்ஷா, நிதின் கட்கரி, கர்நாடகவை சேர்ந்த சதானந்த கவுடா, தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பதால், தவார் உள்ளிட்ட 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர், 

சந்தோஷ் குமார் கங்வார், இந்திரஜித் சிங், ஸ்ரீபத் நாயக், ஜிதேந்தர் சிங், கிரண் ரிஜுஜு, பிரகலாத் சிங் படேல், ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் எல் மாந்தவியா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பஹன் சிங் குலஸ்தே, அஸ்வினிகுமார் சவுபே, அர்ஜூன் ராம் மேக்வால், கங்காதரன் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், கிஷன் பால் குர்ஜார், தாதாராவ் பட்டீல், பர்சோத்தம் ரூபாலா, ராம்தாஸ் அத்வாலே, சாத்வி நிரஞ்சன், பபுல் சுப்ரியோ, சஞ்சீவ் பல்யான், சஞ்சய் சாம்ராவ், அனுராக் தாகூர், சுரேஷ் அங்காடி, நித்யானந்த் ராய், ரட்டன் எல்.கடாரியா, முரளிதரன், சருதா ரேணுகா, ஓம் பிரகாஷ், ரமேஸ்வர் டெலி, பிரதாப் சாரங்கி. கைலாஷ் சவுத்ரி, தெபாஸ்ரீ சவுத்திரி  ஆகியோர்  இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்

உள்ளிட்டோர் இணை அமைச்சர்களாக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டனர். ஆனால் தமிழக துணை முதல்வரும், தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரான ரவீந்திநாத் நாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் எனக் கூறப்பட்டது. இதற்காக அவரது ஆதரவாளர்கள் பதவியேற்ற பின் வரவேற்க ரவீந்திர நாத்குமாரின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகளை இரு தினங்களுக்கு முன்பே ஒட்ட ஆரம்பித்தனர். 

ஆகவே தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற ரவீந்திரநாத் அமைச்சர் பதவியை அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்கவில்லை. இதனால் ஓ.பி.எஸ் குடும்பம் விரக்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.