மோடி, அமித்ஷா மீது முதன் முறையாக ரஜினிகாந்துக்கு பயமும், ஆதங்கமும் சேர்ந்து வந்திருக்கிறது. ஆம் அவரது அடிமடியிலேயே இருவரும் கை வைத்து விட்டதால் மனுஷனுக்கு மேற்சொன்ன இரண்டு உணர்வுகளும் வராதா? என்ன இருந்தாலும்  ரஜினியும் ஒரு மனுஷன் தானே!?

அமித்ஷாவும், மோடியும் அப்படி என்ன வெடி வைத்துவிட்டார்கள் ரஜினிக்கு?

ஆக்சுவலாக இது வேண்டுமென்று நடந்த விஷயமல்ல, எதேச்சையாகதான் நடந்தது. அதாவது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் ஸ்தம்பித்துக் கிடக்கிறது தேசம். 

இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் தர்பார் பட டீசர்  கடந்த 16-ம் தேதி மாலையில் வெளியானது.  டீசரை வழக்கம் போல் பல லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று குறையில்லை. ஆனால் தர்பார் டீசர் பற்றிய எந்த விவாதமோ, அலசலோ, அதிர்வுகளோ எழவேயில்லை. சொல்லப்போனால் நூற்றில் ஒரு படத்தின் டீசராக அது கடந்து போகப்பட்டு விட்டது. 

இதற்கு காரணம், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் நடக்கும் கொந்தளிப்புதான். 

ஆக்சுவலாக தர்பார் படம் முழுக்க முழுக்க மும்பை கதை களத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. மும்பையிலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது. சுனில் ஷெட்டி போன்ற பாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.  ஆக தேசிய அளவில் ரஜினி பெரும் அதிர்வுகளையும், தன்னைப் பற்றிய பேச்சினையும் இந்த தர்பார் படத்தின் இலவச விளம்பரமாக எதிர்பர்த்தார் இந்த டீசர் மூலம். 

ஆனால் பாராளுமன்றத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் மோடியும், அமித்ஷாவும் ஸ்கெட்ச் போட்டு தாக்கல் செய்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் களேபர வைபரேஷன் மூலம் தர்பார்....தார்பாய் ஆகிவிட்டது! என்கிறார்கள் விமர்சகர்கள். அதாவது ரஜினிக்கு, பிரதமர் மோடி பயத்தைக் காட்டி விட்டார்! என்கிறார்கள். 

அதாவது வழக்கமாக ரஜினியின் பிறந்தநாளுக்கு அவரை போனில் வாழ்த்துவார் பிரதமர். குஜராத் முதல்வராக இருந்து, பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டபோது ரஜினியின் வீட்டுக்கே நேரில் வந்து சென்றவர் மோடி. இரண்டாம் முறை மோடி பிரதமராக பதவியேற்ற போது ரஜினியும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். 

அந்தளவுக்கு அவர்களுக்குள் அன்யோன்யம் இருந்தது. சென்னையில் நடந்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய  நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷாவோடு கலந்து கொண்ட ரஜினி, மோடியையும், அமித்ஷாவையும் ‘கண்ணன், அர்ஜூனன்’ என்று சிலாகித்து பேசினார். 

அப்படி இருந்த ஒட்டும் உறவும், சமீபத்தில் கமல்ஹாசனின் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் ரஜினி பேசிய ‘எனக்கு காவி சாயம் பூச முயல்கிறார்கள். ஆனால் நான் சிக்க மாட்டேன்.’ எனும் டயலாக் மூலம் கிழிந்துவிட்டது, பிரிந்துவிட்டது. அதனால்தான் இந்தாண்டு, ரஜினியின் பிறந்தநாளின் போது மோடியோ, பா.ஜ.க. தலைவர்களோ அவருக்கு வாழ்த்து சொல்லவேயில்லை. 

இதில் பெரும் வருத்தத்தில் இருந்த ரஜினியை, குடியுரிமை சட்ட திருத்த மசோதா  அதிர்வுகளால் தன் டீசரின் பரபரப்பு அடிபட்ட விவகாரம் மேலும் அப்செட்டுக்கும், ஆதங்கத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. 
இதெப்டியிருக்கு!?