"தேர்தலும் முக்கிய அறிவிப்பும்" எதிரிகளை திணறவிட்ட மோடி..! 

மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பை தொடர்ந்து எதிர்கட்சிகள் தூக்கமே இல்லாத அளவிற்கு இதையே நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேவையில்லாத வதந்திகளையும் பொய்களையும் எதிர்கட்சியினர் மக்களிடையே பரப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் செய்வதால் நாம் நாட்டுக்காக நல்ல முடிவை எடுத்து, நல்ல நல்ல திட்டங்களை செய்து வருகிறோம் என்பதை இதுவே உறுதி செய்து விடுகிறது.

அதுமட்டுமில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் எந்த விதமான பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதற்கு முன்னதாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீட்டில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல், அது அப்படியே தொடரும். கூடுதலாக வெறும் 10 சதவீதம் மட்டுமே பொருளாதாரத்தில்  நலிந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் பயன் பெறுவார்கள்.

வரும் ஏப்ரல் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்காகத்தான் இதுபோன்ற அறிவிப்பை பாஜக அறிவிக்கிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி  வருகின்றனர். சரி அப்படி பார்த்தால், எப்போதுதான் நம் நாட்டில் தேர்தல்கள் இல்லாமல் இருந்துள்ளது. ஒருவேளை இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை 5 மாநில தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அறிவித்து இருந்தால், 5 மாநில தேர்தலுக்காக தான் இதுபோன்ற அறிவிப்பை பாஜக அறிவித்து உள்ளது என்றும் கூறி இருப்பார்கள.

சரி அதற்கும் முன்னதாக அறிவித்திருந்தால், குஜராத் தேர்தலை காரணம் காட்டி, அதற்காகத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என பேசுவார்கள். இப்படி எந்த திட்டத்தை எப்போது அறிவித்தாலும் அதற்கு ஒரு நொண்டிச்சாக்கை முன்வைத்து மக்களிடையே பொய் பிரச்சாரத்தை பரப்புவதே முதன்மை வேலையாக எதிர்கட்சியினர் கொண்டுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தன் பேச்சால் போட்டு தாக்கி உள்ளார்.

iதற்போது எதிர்கட்சிகள் மெகா கூட்டணி வைக்க திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அது ஒரு  ஊழல் கூட்டணி. இதற்கு உதாரணம் கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவருமே அரசியல் தலைவர்களின் வாரிசுகளாக இருப்பார்கள் அல்லது அரசியல் தலைவர்களின் மகனையோ அல்லது மகளையோ அரசியலில் பெரிய ஆளாக உண்டாக்க தீவிர திட்டம் போடுவார்கள். இதனால் ஊழல் மட்டுமே நடக்கும். 

இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். பண பலத்தின் மூலம் பாஜகவை வீழ்த்தி விடலாம் என எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டு கின்றனர். ஆனால் மக்கள் பலம் கொண்டது பாஜக.நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாஜக பாடுபடும் என பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.