எம்.பிக்களுக்கு மோடி செய்ய உள்ள முதல் வேலையே இதுதான்..!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ள இந்த நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது பாஜக என முடிவாகி உள்ளது. இன்று தேர்வாகும் அனைத்து எம்.பிக்களுக்கும் முதல் நாளே அவர்களுக்காக கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தில் அரசு வீடு வழங்க  உள்ளது. 

பொதுவாகவே மக்களவை உறுப்பினர்கள் என்றால் டில்லியில் தங்குவதற்கு அரசு அவர்களுக்கு வீடு வழங்கும். ஒருவேளை ஏற்கனவே மக்களவை உறுப்பினராக இருந்து மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர் தங்கியிருந்த அதே அரசு வீட்டில் தொடர்ந்து தங்கலாம். இதற்கிடையில் சென்ற முறை அதாவது 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது எதிர்பாராத வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை சற்று அதிகமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு தேவையான வீட்டை வழங்க முடியாத சூழல் உருவானது.

பின்னர் அவர்களை அதே டில்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்க அனுமதி அளித்து இருந்தது. அதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 9  ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டது. மேலும் ரூபாய் 30 கோடி வரை எம்பிக்கள் தங்குவதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில் இந்த முறை வெற்றி பெறும் எம்பிக்களுக்கு ரூபாய் 35 கோடி செலவில் புதிய வீடுகளை கட்டித் தருவது என முடிவு செய்யப்பட்டு அதற்காக 350 அறைகள் கொண்ட பெரிய வீட்டை உருவாக்கி உள்ளது. இதில் 162 எம்பிக்கள் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார் நிறுத்துவதற்காக மட்டும் 391 நிறுத்தும் இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடுத்த நாளே வீடுகள் வழங்க முடியும். சென்ற தேர்தலின் போது ஸ்டார் ஹோட்டலில் எம்பிக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது போன்ற ஒரு சூழல் இந்த தேர்தலின்போது இருக்காது எனவே வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக செய்ய உள்ள ஒரு விஷயம் உடனடியாக அவர்களுக்கு வீடு வழங்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.