Asianet News TamilAsianet News Tamil

#மோடியாவது_மயிராவது #ஈவேரா_எனும்_சாக்கடை... அடித்து உருளும் வெத்து வேட்டுக்கள்..!

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளும், பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாளும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. #மோடியாவது_மயிராவது #ஈவேரா_எனும்_சாக்கடை என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 
 

Modi or Periyar..? beating and rolling sticks
Author
Tamil Nadu, First Published Sep 17, 2020, 10:45 AM IST

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளும், பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாளும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. #மோடியாவது_மயிராவது #ஈவேரா_எனும்_சாக்கடை என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

தமிழகத்தில் பெரியாரிஸ்டுகளும், பாஜகவினரும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். இரு தரப்பினரும் மாற்றி மாற்றி எதிராளிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் மீம்ஸ்கள், கருத்துக்களை பதிவிட்டு கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இரு தரப்பினரும் எதிராளிகளை அவமானப்படுத்துகிறோம் என்கிற நினைப்பில் தத்தம் தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.

 

தந்தை பெரியார் சாதிமத பேதம் ஒழிய பாடுபட்ட தலைவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக உக்கிரமாக போரடியவர். பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் வெறும் கடவுள் மறுப்பு மட்டுமில்லை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் உள்ளடக்கியது. மோடி நமது பாரத பிரதமர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அடித்தட்டில் இருந்து பல நிலைகளை கடந்து பிரதமராக உருவெடுத்தவர். பிரதமரை இழிவுபடுத்துவது நம் நாட்டையே இழிவு படுத்துவதற்கு சமம். இப்படி இருபெரும் தலைவர்களை வைத்து கேவலமாக சித்தரித்து சமூகவளைதளங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்வது அந்த இருபெரும் தலைவர்களுக்கும் நாம் செய்யும் துரோகம்.

 

இருபெரும் தலைவர்களையும் அவர்கள் சார்ந்த கொள்கை, சித்தாந்தங்களால் ஈர்க்கப்படவர்கள் அவர்களது பெருமைகளையும், சாதனைகளையும் முன்னெடுத்து பிரச்சாரம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் அதனை விடுத்து ஒருவருக்கொருவர் அவமானப்படுத்தி பதிவுகளை பரப்பி வருவது வெற்று வெங்காயப்போக்கு. கேடித்தனத்தை விட மோசமான அனுகுமுறை. 

Follow Us:
Download App:
  • android
  • ios