எதிர்பார்ப்பை தவிடு பொடியாகியாகிய மோடி..! ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி ..! 

தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று பிரதமர் மோடி பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நடந்த உரையாடலில் உரை நிகழ்த்தி உள்ளார். தமிழகத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பாஜக கூட்டணி இருக்கும் என்றும், அதே வேளையில் கட்டாயத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இருக்காது என்றும் உறுதியாக தெரிவித்து உள்ளார் மோடி. 

கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை தான் பாஜக பின்பற்றும் என்றும் மோடி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், ஆளும் அதிமுக பாஜக சொல்வதை கேட்டு தான் அனைத்தும் செயல்படுத்துகிறது என்ற பேச்சு தொடர்ந்து அடிபட்டு வரும் சமயத்தில், பழைய நண்பர்களுக்கு என்றும் பாஜகவில் வரவேற்பு உள்ளது என்றும், வாஜ்பாய் வழியை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கும் போது, பாஜக யாருடன் தான் கூட்டணி வைக்குமோ என ஆவல் எழுந்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ் கட்சி என்றும், அரசு ஆவணம் தொடர்பான விவரங்கள் கூட பாதுகாப்பாக காங்கிரஸ் வைக்கவில்லை. மக்கள் இதனை எல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என அந்த உரையில் பேசி உள்ளார்.