பாஜகவிற்கான தீர்வை காங்கிரஸில் தேடாதீர்கள். அது தீயிலிருந்து மீண்டும் எண்ணைச் சட்டிக்கு திரும்புவதற்கு சமம் என மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மன்மோகன்சிங்கினால் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்தை பாசிசத்தனமாக அசுரவேகத்தில் இந்துத்துவ கொள்கையோடு நடைப்படுத்தியவரே மோடி. அமெரிக்கா, WTO சார்ந்தும் இந்தியாவை முதன்முதலில் அடகுவைத்தவர். தமிழீழ இனப்படுகொலை நிகழ்த்தியவர். பசுமைவேட்டை எனும் பெயரில் பழங்குடிகள் மீது போர் தொடுத்தவர். 

உழவர்கள் விவசாயத்தை விட்டுவெளியேற வேண்டுமென்றவர். தண்ணீரை விநியோகத்தை தனியார்மயமாக்கியவர். வேதாந்தா, அதானியின் வளர்ச்சிக்கு அடிகோலியவர். ராணுவ தளவாடத்தில் தனியார்மயத்தை அதிகப்படுத்தியவர். மாநிலங்களின் உரிமைகளை நீர்த்துபோக செய்தவர். டில்லியில் அதிகார குவிப்பை ஆரம்பித்தவர்.

பாஜகவிற்கான தீர்வை காங்கிரஸில் தேடாதீர்கள். மாநில உரிமை பறிப்பிற்கு, மதவெறிக்கு எதிரான போராட்டமே மோடியுடனான போராட்டம். எனவே மாநிலக்கட்சிகளின் சுயாட்சிக்கான, சட்டமன்றங்களின் அதிகாரத்திற்கான அரசியல் எழுச்சியே நமக்கான தீர்வு. தீயிலிருந்து மீண்டும் எண்ணைச் சட்டிக்கு திரும்பாதீர்கள்’’ என அறிவுறுத்தி இருக்கிறார்.