பிரதமர் நரேந்திரமோடி உருவம் பொறித்த ராக்கி கயிறு தயாரித்து 'மோடி சகோதரன்' என இஸ்லாமிய பெண்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமர் மோடி படத்துடன் இஸ்லாமிய பெண்கள் ராக்கி கயிறு தயாரித்து அசத்தி வருகின்றனர். இசை வாத்தியத்துடன் ஒன்றாக கூடியுள்ள அவர்கள், மோடி சகோதரன் என உற்சாகமாக பாடினர். மோடியின் முகம் பொதிந்த ராக்கி கயிறில், கல் பதித்த வேலைபாடுகளுடன் தயாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பின் முகம் பொதிந்த ராக்கி கயிறுகளும் தயார் செய்யப்படுகின்றன. முத்தலாக்கை ரத்து செய்ததால், மோடி தங்கள் சகோதரன் என இஸ்லாமிய பெண்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி மீது இஸ்லாமிய பெண்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.