பிரதமர் மோடியிடம் சொந்த காரே இல்லாத நிலையில் அவருக்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் என்றும், குஜராத்தில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.11 லட்சம் இருப்பு தொகை உள்ளது என்றும், அதே கிளையில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் பத்திரங்கள் உள்ளது என்றும் மோடி தனது வருமானம் தொடர்பான விவரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மோடியிடம், ரூ. 48,944 கையிருப்பாக உள்ளது என்றும், ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி பாலிசி ஒன்றும் உள்ளது.
மேலும் தங்க மோதிரங்கள் 4 வைத்துள்ளார் . அதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் இருக்கும் என்றும், பிரதமர் பதவி ஏற்றதும் அவர் எந்த ஒரு தங்க ஆபரணங்களையும் வாங்கவில்லை என்பதும் தெரிவித்துள்ளார்.

மோடியின் பெயரில் எந்த ஒரு நான்கு சக்கர வாகனமும் இல்லை என்றும் வங்கிகளில் அவரின் பெயரில் எந்த ஒரு கடனும் பெற்றதில்லை என்றும் தாக்கல் செய்துள்ள வருமான வரி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆக, பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் இரண்டரை கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
