Asianet News TamilAsianet News Tamil

கொஞ்சம்தாங்க.. அதிகமில்லை… மோடி அரசின் விளம்பரச் செலவு ரூ.3 ஆயிரத்து 755 கோடி....

modi govt advertisment expenses
modi govt advertisment expenses
Author
First Published Dec 9, 2017, 5:49 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தான் பதவி ஏற்ற மூன்றரை ஆண்டுகளில், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ரூ. 3 ஆயிரத்து 755 கோடி விளம்பரத்துக்காக செலவுசெய்துள்ளது தெரியவந்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், பதாகை, விளம்பர பலகை உள்ளிட்ட வெளியிட விளம்பரம் ஆகியவற்றுக்காக ரூ. 3 ஆயிரத்து 754 ஆயிரத்து 623 கோடி செலவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மின்னணு ஊடகங்களான டி.வி., வானொலி, டிஜிட்டல் சினிமா, தூர்தர்ஷன், இணையதளம், எஸ்.எம்.எஸ். ஆகியவை மூலம் விளம்பரம் செய்த வகையில் ரூ.ஆயிரத்து 656 கோடியை பா.ஜனதா அரசு செலவு செய்துள்ளது.

modi govt advertisment expenses

நாளேடுகளில், வாரப்பத்திரிகைகளில் விளம்பரம் செய்த வகையில் ரூ.ஆயிரத்து 698 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வெளியிட விளம்பரச் செலவுக்காக அதாவது, விளம்பர பலகை, பதாகைகள், சுவரொட்டிகள், புத்தங்கள், காலண்டர்கள் ஆகியவற்றுக்காக ரூ.399 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வெறும் ரூ.56.8 கோடி மட்டுமே மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தன்வர் தாக்கல் செய்த தகவல் அறியும் மனுவில், 2014ம் ஆண்டு ஜூன் 1 முதல் , 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந்தேதி வரை, பிரதமர் மோடியை முன்னிறுத்தி செய்யப்பட்ட விளம்பரங்களின் செலவு ரூ. ஆயிரத்து 100 கோடியாகும்.

கடந்த 2015ம் ஆண்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மான் கி பாத் நிகழ்ச்சிக்காக நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ. 8.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

ஆனால், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு தனது விளம்பரத்துக்காக ரூ. 526 கோடி செலவு செய்ததாக பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios