"3 கீ பாயிண்டை" சொல்லி நெத்தியடி கொடுத்த மோடி..! 

சந்திராயன்-2 நிலவில் இறங்குவதற்கு முன் சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அவர்களும் கலந்து கொண்டதால் மற்ற விஞ்ஞானிகளுக்கு அவர் ஆறுதல் கூறி அவ்விடத்திலிருந்து புறப்பட்டார். 

பின்னர் இது குறித்து பேசிய பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார். சந்திராயன் செலுத்திய நாள் முதல் நிலவை தொடும் கடைசி தருணம் வரை விஞ்ஞானிகள் போராடினார்கள். தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்கள்.. அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.. மிகவும் கவனமாக நேர்த்தியாக அவரவர் வேலையில் இருந்தார்கள்.

அவர்களிடமிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை பார்க்கும் போது இது தான் எனக்கு தோன்றுகிறது. இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என பேசினார் பிரதமர் மோடி.

காரணம் சந்திராயன் தோல்வி அடைந்துவிட்டது என ஒரு சிலரும் சொல்வதும், இவ்வளவு வெற்றி பெற்று உள்ளோமே என ஒரு சிலர் கருதுவதும்... தேவையில்லாத விமர்சனம் செய்பவர்கள் என  சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவான பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் விதமாகவும் அவர்களுக்கு ஆதரவாக தன்னம்பிக்கை இழக்காமல் அற்புதமாக பேசி உள்ளார் பிரதமர் மோடி. அப்போது இந்த உலகில் இருக்கும் மூன்றுவிதமான மக்களில் ஒரு சிலர்  எதுக்குமே முயற்சிக்கவே மாட்டார்கள். தோல்வி என்றாலே அவர்களுக்கு பெரும் பயமாக இருக்கும். மற்ற ஒரு சிலர் ஏதாவது பிரச்சினை என்றாலே வேகமாக அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். மற்ற ஒருவ சிலர் எந்த பிரச்சினையாக இருந்தாலும்... தைரியமாக எதிர் கொள்வார்கள்.

அவர்கள் செய்யும் எந்த ஒரு வேலையிலும் உறுதியாக இருப்பார்கள். தான் இறங்கிய வேலையில் வெற்றி பெற்றே தீருவோம்... என முழு முயற்சியோடு எந்த ஒரு நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள்.. அவர்கள் தான் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்" என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.