தீவிர பிரச்சாரம்   முடித்த  பிரதமர் மோடி கேதார்நாத் சென்று சாமி தரினம் செய்தார். மக்களவை தேர்தலில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தலைவர்கள் தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம்  செய்தார்.

தரிசனம் செய்து முடித்துவிட்டு பிரதமர் மோடி,"உத்தராகண்ட் கேதார்நாத்தில் வழிபாட்டதை நான் அதிஷ்டமாக நினைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுபூர்வமாக உறவு உள்ளது.

கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம், எடுப்பதற்காக அல்ல என கூறினார்.