பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மோடிக்கு  பாஜக  தலைவர்கள் மட்டுமின்றி பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றர்..

இந்நிலையில் பிரதமரின் பிறந்த நாளையொட்டி அவரது மனைவி யசோதா பென், அன்சோல் பகுதியில் உள்ள கல்யாணேஸ்வரி கோவிலுக்கு வருகை தந்தார். அசன்சோல் வங்காளத்தின் எல்லை மற்றும் ஜார்க்கண்டிற்குள் நுழைவதற்கான நுழைவாயில் பகுதியில் உள்ளது. அங்கு உள்ள அருள்மிகு  கல்யாணேஸ்வரி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ராஜா லக்ஷ்மன் சென்  என்பவர் இந்த கோவிலைக் கட்டினார். கல்யாணேஸ்வரி காளியின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்குத் தான் யசோதா பென் வருகை வந்தார். 

யசோதா பென் குழந்தைக் கல்வி குறித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தனாபாத்துக்கு நேற்று வந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் யசோதா பென் கல்யாணேஸ்வரி கோயிலுக்கு வந்தார்.  அவர் அங்கு வந்த போது கோயிலில்  பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ இல்லை, ஆனால் தான்பர்தைச் சேர்ந்த போலீஸ் உயராதிகாரிகள்  யோசோதா பென்னை வரவேற்றனர்.

யசோதா பென்  கல்யாணேஸ்வரர் கோவிலில்  பிரதமரின் பெயரில் 201 பூஜைகள் செய்தார். மேலும்  சிவன் கோயிலிலும் தண்ணீரை ஊற்றி வழிபட்டார்.
யோசோதா பென்னுடன்  அவரது சகோதரர் அசோக் மோடி மற்றும் பி.ஏ அனுஜ் சர்மா ஆகியோர் வந்திருந்தனர் . பிரதமரின் மனைவி இந்த கோவிலுக்கு வந்ததை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.