Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவிலேயே பெரிய அக்யூஸ்ட் மோடி, அமித்ஷா தான்.. தறிகெட்டு பேசிய ராதாரவி.. ஆடிப்போன அண்ணாமலை.

இந்தியாவிலேயே பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க  அது ஒன்று மோடி, மற்றொன்று அமித்ஷா என பாஜக  மேடையில் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Modi and Amit Shah are the biggest   Criminals in India.. Radharavi who spoke badly.
Author
Chennai, First Published Jul 6, 2022, 2:13 PM IST

இந்தியாவிலேயே பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க  அது ஒன்று மோடி, மற்றொன்று அமித்ஷா என பாஜக  மேடையில் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த பாஜகவினர் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர், இவர் பாஜகவை பாராட்டுகிறாரா அல்லது விமர்சிக்கிறாரா என்று தெரியாமல் அங்கிருந்த பலரும் குழம்பினர். இந்நிலையில் அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவை காட்டிலும் பாஜகவே திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போன்றவற்றை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் திமுக அரசை கண்டித்து ராதாரவி கண்டன உரையாற்றினார்.

இதையும் படியுங்கள்:  மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

Modi and Amit Shah are the biggest   Criminals in India.. Radharavi who spoke badly.

அப்போது  அவரது பேச்சு வழக்கம் போல  சர்ச்சை நிறைந்ததாகவே இருந்தது. அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- எப்போதும் எங்க குடும்பத்துக்கு ஆர்டராக பேசிப் பழக்கமில்லை, சகட்டுமேனிக்கு பேசித்தான் பழக்கம், எதை வேண்டுமானாலும் பேசுவோம் என்றார்.அப்போது இடையில் ஒரு தொண்டர்," பாரத் மாதா கி ஜே" என முழங்க, அவரை சிறிது நேரம் முறைத்து பார்த்த ராதாரவி, நம்ம காட்சியில் பெரிய தொல்லை ஒன்று இருக்கிறது, அடிக்கடி பாரத் மாதா கி ஜேன்னு சொல்லுவார்கள், ஒருமுறை சொன்னால் பரவாயில்லை அதுவும் மூன்று முறை சொல்லுவார்கள், அதற்குள் நாம் என்ன பேச வருகிறோம் என்பதே மறந்து போய்விடுகிறது என்றார்.

இதையும் படியுங்கள்: மக்களே உஷார்... கைமீறிப் போகும் கொரோனா , தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு..? அமைச்சர் எச்சரிக்கை.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், நமது மாநில தலைவர் அண்ணாமலைஜியை எனக்கு ரொம்ப பிடிக்கும், அண்ணாமலை மிகவும் திறமைசாலி, நான் பல தலைவர்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் அண்ணாமலையில் போல பேச்சாற்றல் எந்தத் தலைவரிடமும் இருந்ததில்லை. அண்ணாமலையால் பாஜகவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கிறது, தனது பேச்சாலேயே ஊடகத்தினரை தன் பக்கம் ஈர்த்தவர் அண்ணாமலை, பிஜேபி என்றாலே கூட்டம் வராது என்று சொல்லுவார்கள், ஆமாம் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து வருகிற கூட்டம் அல்ல இது தயிர் சாதம் சாப்பிட்டு உருவான கூட்டம் இது.

Modi and Amit Shah are the biggest   Criminals in India.. Radharavi who spoke badly.

அண்ணாமலை தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர், அதை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள், அதை வெளியில் சொன்னால் அண்ணாமலையே கோபித்துக் கொள்வார். கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவர் முதல்வராக இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் தான், ஸ்டாலின் மிகவும் நல்லவர், அவரை திட்டுவதை அண்ணாமலை விட்டுவிட வேண்டும், ஸ்டாலினுக்கு ஊழல் செய்ய மாட்டார், ஏனென்றால் அவர் ஐந்து லட்சம் கோடிக்கு அதிபதி. மகாராஷ்டிராவில் நடந்ததைப் போல தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், திமுக எப்போதும் அந்த பயத்திலேயே இருக்கிறது.

திராவிட மாடல் என்று திமுகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அது எப்போதும் சோறு போடாது, இந்தியாவிலேயே இரண்டு பெரிய அக்யூஸ்ட் தான் இருக்கிறார்கள் ஒன்று அய்யா மோடி, இன்னொருவர் அமித்ஷா... ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், மவனே கருவறுத்து விடுவாங்க.. பார்த்துக்கொள். நீ எத்தனை முறை ஒன்றிய அரசு என்று சொன்னாலும் சரி அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். தமிழகத்தில் அண்ணாமலையை வளர்த்து விட்டதே திமுக தான், வர்ற தேர்தலில் DMK Vs Bjp இரண்டுக்கும் தான் போட்டி இவ்வாறு அவர் பேசினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios