நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்..! திண்டுக்கல்லில் மோடி..! சென்னையில் அமித்ஷா..! தமிழகத்தை குறிவைத்த பாஜக..
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை குறி வைத்த பாஜக
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை பாஜக கைப்பற்றியுள்ளநிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் முழுமையாக பாஜகவால் கால் ஊண்ட முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பாஜகவை வளப்படுத்த தேசிய தலைமை முடிவெடுத்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதியை இலக்காக வைத்து பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், ஆட்களை சேர்க்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஒரே மாதத்தில் தமிழகத்திற்கு 50 மத்திய அமைச்சர்கள் வர இருப்பதாகவும் தமிழக அரசின் செயல்பாட்டை கண்காணிக்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
ஒரே மேடையில் மோடியும் ஸ்டாலினும்
இந்தநிலையில் தமிழகத்திற்கு ஒரே நாளில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருகைபுரிய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்காக இன்று மதியம் பிரதமர் மோடி வர உள்ளார். பெங்களூரில் இருந்து மதுரைக்கு வரும் பிரதமர், ஹெலிகாப்படர் மூலம் திண்டுக்கல் செல்லவுள்ளார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். எனவே தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் ஆர்வமோடு தயாராகி வருகின்றனர். இதற்காக திண்டுக்கல் மதுரை சாலையில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்போம்… அண்ணாமலை அறிவுறுத்தல்!!
பாஜக தொண்டர்கள் உற்சாகம்
அதே வேளையில் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். நாளை சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்கவுள்ளார். இதற்காக சென்னை வரும் அமித்ஷாவிற்கு பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகம் வர இருப்பது பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படியுங்கள்
பட்டாசு ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள்..! விபத்துக்கு இதுவே காரணம்- கே.பாலகிருஷ்ணன்