ஓவரா ஆட்டம் போடும் KCR..ஓட விடப்போகும் பாஜக... தெலுங்கானாவுக்கு குறி வைத்த மோடி அமித்ஷா..
வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் கால் பதிக்க வேண்டுமென்ற முனைப்பில் ஈடுபட்டுவரும் மோடி அமித்ஷா தெலுங்கானாவில் தனது தளத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் கால் பதிக்க வேண்டுமென்ற முனைப்பில் ஈடுபட்டுவரும் மோடி அமித்ஷா தெலுங்கானாவில் தனது தளத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் எதிரொலியாகவே 18 ஆண்டுகளுக்குப் பிறகு தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தனது செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சி அன்று நடத்துகிறது. இதேநேரத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து வரும் நிலையில், தெலுங்கானாவை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: தெலுங்கானாவை தட்டி தூக்கப் போகும் பாஜக.. ஹைதராபாத்தில் 2 நாள் முகாமிடும் மோடி.. முழு விவரம் உள்ளே.
வட இந்தியாவைப் போல் தென்னிந்தியாவில் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் நீண்டநாட்களாக பாஜகவுக்கு இருந்துவருகிறது. அந்தவகையில் கேரளா தமிழகத்திற்கு பாஜகவை விரிவுபடுத்த முயற்சித்து அதில் போதிய வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தங்களது வியூகம் ஓரளவுக்கு எடுபடுவதால் அம்மாநிலங்களில் முழு கவனத்தையும் செலுத்த மோடி அமித்ஷா முடிவு செய்துள்ளனர். அதன் எதிரொலியாகவே தெலுங்கானாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்தை பாஜக அங்கு நடத்துகிறது.
ஏற்கனவே பிரதமர் வாஜ்பாய் காலத்தில் ஐதராபாத்தில் செயற்குழு கூட்டத்தை பாஜக நடத்தியது. ஆனால் அன்று தொடங்கி இன்று வரை வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவின் பாஜகவால் கால்பதிக்க முடியவில்லை, கர்நாடக மாநிலத்தை தவிர இதர மாநிலங்களில் பாஜக வியூகம் எடுபடவில்லை. இதனால் வட இந்தியாவில் சாதித்ததை போல கேரளா மற்றும் தமிழகத்தில் செய்ய முடியாது என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளது. தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாஜக முயற்சித்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற அதே இலக்க வெற்றியையே அக்காட்சி ஆள் பெற முடிந்திருக்கிறது. அதிலும் அதிமுகவின் கூட்டணி பலத்தினால் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளது.
பிரதமரை மூன்றாவது முறையாக அசிங்கப்படுத்திய முதல்வர்..கொஞ்சம் கூட நாகரிகமில்லாத கேசிஆர்..
அதிமுக-திமுக என்ற திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டு மக்கள் ரத்தத்தில் ஊறிப்போன கட்சியாக இருந்து வருகின்றன, இதனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ் பாஜக இங்கு எடுபடாத நிலை உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் தனது நேரத்தை வீணடிக்க விரும்பாத பாஜக தனது முழு கவனத்தையும் தெலுங்கானாவின் பக்கம் திருப்பியுள்ளது. அதாவது தெலுங்கானா மக்கள் பாஜகவின் கொள்கை மற்றும் அதன் செயல்பாடுகளை ஏற்க தொடங்கியுள்ளனர். இதன் விளைவாகவே அம்மாநிலத்தில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி பாஜக இரண்டாம் இடம் கைப்பற்றியுள்ளது. இதை சரியாக பயன்படுத்தி எதிர்வரும் தேர்தலில் அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
இதன் எதிரொலியாகவே அம்மாநில முதலமைச்சர் கே.சி.ஆர் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான வியூகங்களில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி இதுவரை தெலுங்கானா மாநிலத்திற்கு மூன்று முறை வந்தும் அவரை வரவேற்காமல் அவர் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில்தான் அம்மாநிலத்தில் உள்ள தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாஜக தனது செயற்குழுக் கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது. இதேபோல தெலுங்கு மொழி பேசும் மற்றொரு மாநிலமான ஆந்திரப் பிரதேசம் ஏற்கனவே பாஜகவை தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே பாவித்து வருகிறது.
பாஜகவுக்கு நம்பிக்கை கொடுத்த தெலுங்கானா...
கடந்த 2019 மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் பாஜக 4 இடங்களை கைப்பற்றிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அதற்கு முந்தைய நடந்த சட்டமன்றத் தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தது, மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி பாஜகவின் தலைமைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதேபோல் 2020 நவம்பரில் துப்பாக்கா சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தனது கூட்டணி கட்சியான டிஆர்எஸ் ஆட்சிக்கு எதிராக மக்கள் எதிர் மனநிலையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பாஜக, டிஆர்எஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் துப்பாக்கா தொகுயில் அக்காட்சியை எதிர்த்து நின்று எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதை தனது வெற்றி கணக்கில் தொடக்கமாக எடுத்துக் கொண்டார் பாஜக, அங்கு டிஆர்எஸ் கட்சியை தீவிரமாக எதிர்ப்பது என முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றது. எனவே வரலாற்றுரீதியான தெலுங்கானா பாஜகவுக்கு சாதகமாக இடமாக அறியப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிஆர்எஸ் கட்சியின் நிர்வாக தோல்வி அங்கு மக்களை பாஜகவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பாஜக அங்கு செல்வாக்கு பெற்று வருகிறது, இதே நேரத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பாஜகவையும், பிரதமரையும் அவமானப் படுத்தும் வகையில் நடந்து வருவதால், அடுத்த தேர்தலில் தெலுங்கானாவை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மோடி அமித்ஷா தீவிரம் காட்டி வருகின்றனர்.