பிரதமரை மூன்றாவது முறையாக அசிங்கப்படுத்திய முதல்வர்..கொஞ்சம் கூட நாகரிகமில்லாத கேசிஆர்..
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வருகிறார். ஜூலை 4-ம் தேதி காலை வரை ஹைதராபாத்தில் தங்குவார். ஆனால், ஹைதராபாத் வரும் பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் ஹைதராபாத் பயணம் தொடர்பாக, அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவிடம் பொறுப்புகளை அம்மாநில அரசு ஒப்படைத்துள்ளது. மேலும் அவர், பிரதமர் மோடியை வரவேற்பதோடு, திரும்பும் போது வவழியனுப்பி வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:300 யூனிட்டு மின்சாரம் இலவசம்... பஞ்சாப் முதல்வரின் அறிவிப்பால் வாயடைத்துப்போன மக்கள்!!
மேலும், பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.55 மணிக்கு பேகம்பேட்டை விமான நிலையத்தை வந்தடைகிறார். ஜூலை 4ம் தேதி காலை 9.25 மணிக்கு பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி கடந்த இரண்டு முறை ஹைதராபாத் வந்தபோது, தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவிடம் அந்தப் பொறுப்புகளை அம்மாநில முதலமைச்சர் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பாக ஹைதராபாத்திற்கு மோடி வந்தபோது தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் அவரை வரவேற்கவில்லை. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ராமானுஜாச்சாரியாரின் சிலை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோடி ஹைதராபாத் வந்தபோது, அவரை வரவேற்க முதலமைச்சர் செல்லாதது பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படிக்க:எம்பிக்களின் ரயில் பயண செலவு இத்தனை கோடியா? மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
கேசிஆர் உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியை வரவேற்க வரமுடியவில்லை என்றும் முதல்வர் அலுவலகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து மே மாதம், பிரதமர் மோடி ஐஎஸ்பி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தபோதும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை. அப்போது பிரதமர் மோடியை அரசு சார்பில் மாநில அரசு சார்பில் அமைச்சர் தலசானி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஹைதராபாத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி… நகரை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது காவல்துறை!!
இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று ஹைதராபாத் வருகிறார். அவரை முதலமைச்சர் கேசிஆர் வரவேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு ஆதரவாக கே.சி.ஆர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடியை வரவேற்பதில் இருந்து விலகி இருக்கும் கேசிஆர், யஷ்வந்த் சின்ஹாவையே வரவேற்பது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க:தெலுங்கானாவை தட்டி தூக்கப் போகும் பாஜக.. ஹைதராபாத்தில் 2 நாள் முகாமிடும் மோடி.. முழு விவரம் உள்ளே.
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி தங்கும் பேகம்பேட்டை ராஜ்பவன் சாலையில் 4000 பேரும் அணிவகுப்பு மைதானத்தை சுற்றி 3 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பாஜக செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஐதராபாத்தில் அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வருகை தர உள்ளதை ஒட்டி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.