மோடி அடுத்த அதிரடி..! தமிழகத்தை தாறுமாறா வளைத்து போட்டு தடாலடி...!   

நேற்று மாலை பிரதமர் பதவி ஏற்பு விழாவில்,உடன் 57 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

அதில் குறிப்பாக நிதி அமைச்சர் பொறுப்பு ஏற்கனவே ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக கருதப்படும் நிதியமைச்சர் பதவியை தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேலும் தமிழகத்தை சேர்ந்தஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் தமிழகத்தில் இருந்து இருவருக்கு நாட்டின் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பை வழங்கி உள்ளது மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாஜக ஒரு எம்பி சீட் கூட வெல்ல வில்லை. அதே சமயத்தில் அதிமுக சார்பில் தேனீ தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ஆர்  வெற்றி பெற்று மக்களவை எம்பி ஆனார்.இவருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஒரு வாய்ப்பு அமையாமல் போய் விட்டது. 

அதற்கு முக்கிய காரணமே, அதிமுக தான் என ஒரு பக்கம் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததால் தான் தேனீ தொகுதி தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது. இதன் பாதிப்பு வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது என கூறி முதல்வர் மற்றும் அதிமுக தரப்பு முக்கிய  புள்ளிகள் பன்னீர் செல்வத்திடம் பேசி அமைச்சர் பதவி ஓபிஆர்- விற்கு வேண்டாமே... என பேசி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.


 
இருப்பினும், தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு, மிக முக்கியமாக கருதப்படும் நிதி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் பொறுப்பை வழங்கி தமிழக மக்கள் மனதில் ஒரு படி மேலே சென்று உள்ளது பாஜக. இது தான் மோடியின் தந்திரம் என்றும், அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்து எப்படியும் தமிழகத்தில் காலூன்ற பக்கவா திட்டம் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. 


 
மேலும் அமித்ஷாவுக்கு - உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, நிதின் கட்கரிக்கு சாலை போக்குவரத்துத்துறை என 57அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.