ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்றுள்ளனர். இதை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளை பாதுகாப்பது குறித்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பது குறித்தும் முடிவு செய்து அறிவிக்கப்படும். தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கரிகால சோழன், ராஜராஜ சோழன் போல முதல்வர் பழனிச்சாமி நவீனகால ராஜராஜ சோழன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாராம் சூட்டியுள்ளார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது தந்தையின் சதாபிஷேக திருமணவிழாவில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்றுள்ளனர். இதை வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளை பாதுகாப்பது குறித்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பது குறித்தும் முடிவு செய்து அறிவிக்கப்படும். தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மீத்தேன், ஷேல் கியாஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் மு.க.ஸ்டாலின் தான் கையெழுத்திட்டு அனுமதி கொடுத்தார். அதன் விளைவு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முமுதல்வரின் இந்த அறிவிப்பால் மு.க.ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். அவர் பெரிய நடிகர். மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க;- இனிமேலாவது திருந்துங்க... பாஜகவை வறுத்தெடுத்த கனிமொழி..!
மேலும் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சோழ மண்டலத்தை பாதுகாக்க ராஜராஜ சோழனாகவே மாறி செயல்படுகிறார். வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் தெரிவித்துள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 12, 2020, 1:24 PM IST