Asianet News TamilAsianet News Tamil

சிஸ்டம் சரியில்லைன்னு புலம்பினா போதுமா..? ரஜினியை மறைமுகமாக சீண்டிய கமல்...!

மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை என்று புலம்புபவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
 

MNM President Kamal slam Actor Rajinikanth?
Author
Chennai, First Published Nov 21, 2020, 8:47 AM IST

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் ஆணையம், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாக்களர் பட்டியலில் பெயரை சேர்க்க நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.MNM President Kamal slam Actor Rajinikanth?

அதில், “வாக்காளர் என்ற அடையாளம் 18 வயதை பூர்த்தி செய்யும் ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம், அங்கீகாரம்.  தன் கடமைகளை சரியாக செய்யாத சமூகம் என்பது தன்னுடைய உரிமைகளையும் தன்னாலேயே இழந்து விடும். 'மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை' என புலம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகூட இல்லை.  நாம் எதை வேண்டாம் என நினைக்கிறோமோ அந்த விஷயத்தால்தான் நமக்கு ஆபத்து நேரிடுகிறது.
நவம்பர் 21, டிசம்பர் 12, 13-ல் வீட்டருகே உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை தொடர்பான எல்லா தேவைகளையும் அங்கு பெறலாம். பீகார் தேர்தலில் ஒரு வேட்பாளர் 12 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். பீகார் தேர்தலில்  இல்லத்தரசிளின் வாக்குகள்தான் கட்சிகளின் வெற் தோல்வியை தீர்மானித்துள்ளன. நீங்கள் வாக்களிப்பது யாருக்கோ அல்ல; உங்களுக்காகத்தான் வாக்களிக்கிறீர்கள். உங்களுக்காக யார் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். MNM President Kamal slam Actor Rajinikanth?
 நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதாக 2017-ல் அறிவிப்பு வெளியிட்டபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது சிஸ்டம் சரியில்லை என்று புலம்புவோரிடம் வாக்காளர் அடையாள அட்டைக் கூட இல்லை என்று கமல் கூறியிருக்கிறார். கமல், நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios