Asianet News TamilAsianet News Tamil

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்... நாங்க சீனியர்டா..? கொந்தளித்த விஜயகாந்த மகன்..!

தேமுதிக , மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் , இது தொடர்பாக விஜயகாந்தினை நேரில் சந்திக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார்.
 

MNM calls for alliance ... Are we seniors ..? Vijaykantha's son in turmoil ..!
Author
Tamil Nadu, First Published Mar 9, 2021, 4:02 PM IST

தேமுதிக , மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் , இது தொடர்பாக விஜயகாந்தினை நேரில் சந்திக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

நடைப்பெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைப்பெற்ற நிலையில், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திக ளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமு , பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.MNM calls for alliance ... Are we seniors ..? Vijaykantha's son in turmoil ..!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், தேமுதிக தனது அரசியல் நிலைப்பாட்டின் இறுதி முடிவை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் வேளையில், தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் இணைய வேண்டும். இது தொடர்பாக விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசவுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.MNM calls for alliance ... Are we seniors ..? Vijaykantha's son in turmoil ..!

ஏற்கெனவே தங்கள் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்களுக்கு தலா 40 தொகுதிகள் விதம் 80 தொகுதிகளை பங்கீட்டு உள்ளது. ஒருவேளை தேமுதிக இணையும் பட்சத்தில் எத்தனை தொகுதிகள் கொடுக்க முடியும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்த மக்கள் நீதிமய்யம் எத்தனை தொகுதிகளை விட்டுத்தர முடிவெடுத்துள்ளதாக தெரிய வராத நிலையில் இந்த வரவேற்பை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிராகரித்துள்ளார்.

 MNM calls for alliance ... Are we seniors ..? Vijaykantha's son in turmoil ..!

இது குறித்து அவர் கூறுகையில், ‘’மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க மாட்டோம். அரசியலில் நாங்கள்தான் சீனியர். அதனால், தெய்வத்துடனும், மக்களுடனும் மட்டும்தான் கூட்டணி அமைப்போம். தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios