பிரபலங்கள் விவசாயத் தொழில் செய்வது தற்போது ட்ரெண்டிங் கான விசயம். நீதிபதிகளில் ஆரம்பித்து அரசியல் கட்சி தலைவர்கள் எம்எல்ஏ அமைச்சர்கள் வரைக்கும் இந்த ட்ரெண்டிங் தொடர்ந்துகொண்டிருக்கிறது.அந்த வகையில் எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய வயலில் தானே உழவு தொழில் செய்யும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது.

ஒடிசா மாநிலம் நபராங்காபூர் மாவட்டம், தபுகாவூன் தொகுதியின் பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், மனோகர் ரந்தாரி. சமீபத்தில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து மாநிலத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.  இந்நிலையில், எம்.எல்.ஏ., மனோகர் ரந்தாரி, தனக்கு சொந்தமான, 25 ஏக்கர் பண்ணை நிலத்தில், கடந்த சில நாட்களாக தானே உழவு செய்து வருகிறார்.


இவருடைய மனைவி, அரசு ஊழியராக பணியாற்றுகிறார். தினமும் காலை 5 மணிக்கு மனைவியுடன், வயலுக்கு வந்து விடுகிறார். காலை, 10 மணி வரை, மனைவியுடன் சேர்ந்து வயலில் உழவு பணிகளை செய்து விட்டு அதன்பின் தான்.  மனைவி அலுவலகத்துக்கு செல்கிறார். எம்.எல்,ஏ., மட்டும் மதியம் 12 மணி வரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்புகிறார். நிலத்தில் தானே உழவு செய்யும் எம்.எல்.ஏ., ரந்தாரியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

சிறு வயதிலிருந்தே விவசாய பணிகளை செய்து வந்த ரந்தாரிக்கு  எம்.எல்.ஏ., பதவி இரண்டாம் பட்சம் தான். ஆண்டுதோறும், நெல் மற்றும் சோளம் பயிரிடுவதன் மூலம், 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம். விவசாயம் வளர்ச்சியடைந்தால்தான் நாட்டில் பட்டினி குறையும். விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.என்று இளைஞர்களே விவசாயத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் ரந்தாரி எம்எல்ஏ.