அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் விலகியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அம்மா பேரவை இணைச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமை செயலகத்திற்கு அவர் விலகல் கடிதத்தை அவர் அனுப்பி இருக்கிறார். தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு காட்டாமல் அதிமுக இணைந்து சென்று ஆட்சியையும் கட்சியையும், காப்பாற்ற இரு தரப்பினும் முன்வரவேண்டும் என அதிமுக தலைமையை வெகு நாட்களாக வலியுறுத்தி வந்தார்.

 

இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்து விலகியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.