டிடிவி தினகரனுக்கு ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளநிலையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 20 ஆக உயர்ந்துள்ளது. 

நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு சாத்தியமாகியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை இழந்துவிட்டது என்றும், எனவே புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். 

மேலும் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்துள்ளார் எனவும் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். 
இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏக்களும் புதுச்சேரியில் உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டில் தங்கி வருகின்றனர். காரணம் கேட்டால் ஓய்வுக்காக வந்துள்ளோம் என பச்சையாக பொய் கூறுகின்றனர். 

இதனிடையே எடப்பாடி ஒபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் டிடிவி எம்.எல்.ஏக்க்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளநிலையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி  ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 20 ஆக உயர்ந்துள்ளது. 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரத்தினசபாபதி, 6 பேர் கூடி மட்டுமே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் எனவும், எம்.எல்.ஏக்களை கலந்தாலோசிக்க தவறுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.